பாரதத்தின் நன்மைக்காக பாராயணம்
மூலாம்னாய ஸர்வக்ஞ ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகளின் ஆணைப்படி ஸனாதன வைதீக இந்து தர்மத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மன சங்கடத்தை ஏற்படுத்தும் சமீபத்திய நிகழ்வுகள் சரிப்படுத்த நம் பாரத தேசத்தில் உள்ள அனைத்து பக்தர்கள் எல்லாம் ஒருங்கிணைந்து 'ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ கருணாரஸ (கராவலம்ப)' ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தனர். இது நம் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பை அளிக்கும். இந்த இயக்கத்தில் நமது பாரத தேசத்தின் நன்மைக்காக, ஆச்சார்யாள் அன்பு ஆணைப்படி, குழு பாராயணம், நொய்டா செக்டர் 42 சங்கர மடத்தில் மற்றும் நொய்டா செக்டர் 62 ஸ்ரீ விநாயகா ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில் பாராயணம் செய்தனர். மேற்கூறிய முறையீட்டுக் கருத்தில் கொண்டு, பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணா சுந்தரியின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ், பக்தர்களின் பாராயணம் நடைபெற்றது. மகா தீபாராதனையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது, வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பானகம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்தப் பாராயணத்தை எஸ். சுரேஷ், ராமசேஷன், பிரியா ராஜு ஐயர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். - நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்