நொய்டா முருகன் கோவிலில் சஷ்டி, கிருத்திகை
நொய்டா முருகன் கோவில் என்று எல்லோராலும் அறியப்படும், ஸ்ரீ விநாயகா ஸ்ரீ கார்த்திகேய கோவிலில் கிருத்திகை மற்றும் சஷ்டியை முன்னிட்டு ஸ்ரீ கார்த்திகேயனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தன. கார்த்திகை நட்சத்திரம் மற்றும் சஷ்டி ஒரே நாளில் வருவது மிகவும் சிறப்பானதாகும். நொய்டாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி, டெல்லி, இந்திராபுரம், காஜியாபாத், மற்றும் குருகிராம் ஆகிய அண்டைப் பகுதிகளிலிருந்தும் வந்த பக்தர்கள், ஸ்ரீ கார்த்திகேயரைப் போற்றிப் பல்வேறு ஸ்லோகங்களைச் சொல்லி, 'முருகனுக்கு ஹரோ ஹரா' என்று கோஷமிட்டதை காண முடிந்தது. 'சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை, சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமும், இல்லை', என்கிற பழமொழி, நாம் எல்லோரும் அறிவோம்'. முருகனின் மறுபெயர் அழகு' காண, நொய்டா செக்டர் 62 முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது . இங்குள்ள முருகனை வணங்கினால் 'வெற்றி' நிச்சயம். கோபுரத்தைக் காண வருவோர்க்கு 'கோடி புண்ணியம்' என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துக்கொள்கிறது. - நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்