நொய்டா கோவிலில் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா ஜெயந்தி
நொய்டா, செக்டார் 62,ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்டார். மேலும், தொடர்ந்து மாதந்தோறும் அனுஷம் நட்சத்திர பூஜையும் நடந்தது. இந்த அனுஷம் நட்சத்திர பூஜை கடந்த ஐந்தாண்டுகளாக ஒவ்வொரு மாதமும் தடையின்றி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த சந்தர்ப்பத்தில், சிறப்பு வேதபாராயணம் (ரிக் வேதம், யஜுர் வேதம், சுக்ல யஜுர் வேதம்) ரவி சர்மா, கோவில் வாத்தியார்கள் மணிகண்டன் சர்மா, மோஹித் மிஸ்ரா, அர்ஜுன் வழங்கினர். மகா தீபாராதனையுடன் பூஜைகள் நிறைவடைந்து, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. - நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்