உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / நொறுக்குகள்

நொறுக்குகள்

� � தேங்காய் பொடி செய்யும்போது சிறிது புளியையும் எண்ணெயில் வறுத்து சேர்த்துக் கொண்டால் பல வாரங்கள் ஆனாலும் கெட்டுப்போகாது. � � குளிர்சாதன பெட்டிக்குள் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க எலுமிச்சை பழத்தை வைக்க வேண்டும். � � ஆப்பம் செய்ய மாவு அரைக்கும்போது அதில் துருவிய தேங்காயை சேர்த்துக் கொண்டால் சுவை கூடும். � � எலுமிச்சை சாதத்தில் வறுத்த நிலக்கடலையை சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும். � � கிரேவி வகைகளை செய்யும்போது அதில் கொத்தமல்லி இலைகளை துாவினால் மணமும், சுவையும் கூடும். � � பருப்பு, பயிர் வகைகளை வேக வைக்கும்போது குக்கரை பயன்படுத்துவது சிறப்பு. அப்போது, அதிலுள்ள சத்துகள் அனைத்தும் கிடைக்கும். � � ரசத்திற்கு மிளகு, சீரகம் அரைக்கும்போது அதனுடன் சிறிது கொள்ளு சேர்த்தால் ரசத்தின் சுவை கூடும். � � பீன்சை வைத்து கூட்டு செய்யும்போது தேங்காய், சீரகம் அரைத்து சேர்த்தால் ருசியாக இருக்கும். � � பாசிப்பயறு, கொண்டைக்கடலை செய்யும்போது தேங்காய் துருவலுடன் சிறிது இஞ்சித் துருவல் சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும். � � துவரம் பருப்பு வேக வைக்கும்போது, 1 டீஸ்பூன் வெந்தயத்தையும் கலந்து வேக வைத்தால் சாம்பார் சீக்கிரம் கெடாது - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை