| ADDED : செப் 12, 2026 04:27 AM
- நமது நிருபர் -: கடுகை அரைத்து மீனில் தடவி சிறிது நேரம் ஊறவைத்த பின், அவற்றை குழம்பில் சேர்த்தால், மீன் உடையாமல் இருக்கும். பரோட்டாவுக்கு மாவு பிசையும்போது தண்ணீருக்கு பதிலாக சோடா சேர்த்து பிசைந்தால், பரோட்டா பஞ்சு போல மிருதுவாக இருக்கும். இஞ்சி, சீரகம் போன்றவற்றை உணவில் அதிகமாக எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது உடல்நலத்திற்கு நல்லது. தயிர் சாதம் செய்யும்போது, சாதத்தை சிறிது பாலுடன் சேர்த்து குழைய வேகவைத்து மசித்துக் கொள்ளவும். பின் தாளித்து, புளிப்பில்லாத தயிர் சேர்த்து கிளறினால் சுவையான தயிர் சாதம் தயார். சூப், கிரேவி போன்ற உணவுகள் தயாரிக்கும் போது, கிரீம் இல்லையெனில், வெண்ணெய்யுடன் பாலை நன்கு கலந்து கிரீமுக்கு பதிலாக பயன்படுத்தலாம். உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது, கெட்டித் தயிர் சேர்த்து வதக்கினால், அதன் சுவை அருமையாக இருக்கும். வாரத்துக்கு இருமுறை பனங்கற்கண்டு சாப்பிட்டு வந்தால், சிறுநீரக கற்கள் பிரச்னை குணமாகும். கறிவேப்பிலை துவையல் செய்யும்போது உளுந்தம் பருப்புக்குப் பதிலாக வேர்க்கடலையை வறுத்து சேர்த்தால், துவையலின் சுவை கூடும்.