வால்நட்ஸ் மூளையின் ஆரோக்கியத்திற்கு முதன்மையானது. இவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் DHA, ஒரு வகை ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ளது. DHA புதிதாகப் பிறந்த குழந்தைகளின் மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதாகவும், பெரியவர்களின் அறிவாற்றல் செயல்திறனை மேம்படுத்துவதாகவும் அறியப்பட்டுள்ளது.வால்நட்ஸ்களை இரவில் ஊறவைத்து சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள ஊட்டச்சத்துகள் அதிகரிக்கும். இதை தவிர ஸ்மூத்தி, சாலட்,, ஷேக்ஸ், சட்னி, காலை உணவு தானியங்கள், இனிப்பு வகைகள் ஆகியவற்றில் சேர்த்து சாப்பிடுவதும் நல்ல யோசனையாகும்.குறிப்பாக கோடைக்காலத்தில் வால்நட்ஸ் சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் காலை நேரம். இரவில் 6 முதல் 8 பாதி வால்நட்ஸ்களை ஊறவைத்து வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.நன்மைகள்
வால்நட்ஸ் மூளையின் செயல்பாட்டிற்கு மட்டுமல்ல, குடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. அவற்றின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதய நோய், டைப்-2 நீரிழிவு மற்றும் புற்றுநோயிலிருந்து கூட பாதுகாப்பை வழங்குகின்றன.வீக்கம்
இதய நோய், அல்சைமர், வகை 2 நீரிழிவு மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு அழற்சியே அடிப்படைக் காரணம். அக்ரூட் பருப்பில்(வால்நட்ஸ்) பாலிபினால்கள் இருப்பதால், அவை வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவும்.
குடல் ஆரோக்கியம்
ஆரோக்கியமான குடல் நல்ல ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை உறுதி செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஊறவைத்த அக்ரூட் பருப்புகளை(வால்நட்ஸ்) சாப்பிடுவது நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை அதிகரிக்க உதவுகிறது, இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.
எடையை குறைக்க
ஊறவைத்த அக்ரூட் பருப்புகளை(வால்நட்ஸ்) தவறாமல் உட்கொள்வது மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும். மேலும் பசியைக் கட்டுப்படுத்த உதவி செய்வதோடு, எடையை குறைக்கவும் வால்நட்ஸ் உதவுகிறது.
உயர் ரத்த அழுத்தம்
உயர் ரத்த அழுத்தம் பக்கவாதத்திற்கான முக்கிய ஆபத்து காரணியாக இருக்கலாம். ஊறவைத்த அக்ரூட் பருப்புகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
அல்சைமர் நோய்
வால்நட்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளையில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்தை குறைக்க உதவுகிறது. தினமும் ஊறவைத்த அக்ரூட் பருப்புகளை(வால்நட்ஸ்) எடுத்துக் கொள்வதன் மூலம் நினைவாற்றல் மற்றும் கற்றல் திறன் அதிகரிப்பதோடு, அல்சைமர் நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.