மேலும் செய்திகள்
உப்பு அதிகமாக சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா?
05-Sep-2026
ரிவர்ஸ் ஜாக்கிங்
15-Aug-2026
துாக்கமும் கண்களை தழுவட்டுமே
15-Aug-2026
மழை காலத்தில் கர்ப்பிணிகள் பாதுகாப்பு
08-Aug-2026
மழை கால நோய்களில் இருந்து பாதுகாப்பு
08-Aug-2026
சுறா, திமிங்கலம், சால்மன் போன்ற ரக மீன்கள் ஆழ்கடலில் உள்ளன. இவற்றின் கல்லீரலில் இருந்து எண்ணெய் எடுத்து சிறிய நீள் செவ்வக வடிவக் குழாய்களில் அடைத்து மாத்திரையாக கடைகளில் விற்கப்படுகிறது. இவை 'காட் லிவர் ஆயில்' (Cod liver oil) மாத்திரைகள் என அழைக்கப்படுகின்றன. இந்த மீன் எண்ணெய் மாத்திரைகளை யார் யார் சாப்பிடலாம், இது நல்லதா கெட்டதா எனத் தெரிந்துகொள்வோமா?மீன் எண்ணெய் மாத்திரையில் உள்ள சத்துகள் குழந்தை கண் நோய்களைப் போக்க உதவும். முதியோருக்கு ஏற்படுகிற பார்வைக் கோளாறைத் தள்ளிப்போட உதவும். மூட்டு வலியைக் குறைக்க உதவும். ரத்தத்தில் கெட்ட கொழுப்பைக் குறைக்கும். ரத்தக் குழாய்களில் கெட்ட கொழுப்பு ஏற்படுத்தும் பாதிப்புகளைக் குறைத்து இதய பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால், அதையும் ஓரளவு கட்டுப்படுத்தும். சருமப் பாதுகாப்பு கிடைக்கும். உடலில் காயங்கள் சீக்கிரம் ஆறும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வைட்டமின் ஏ, டி ஆகிய ஊட்டச்சத்துகளும், ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் மிகப் பெரிய மீன் வகைகளிலிருந்து தயாரிக்கப்படும் மீன் எண்ணெயில் உள்ளன. டுனா, டிரவுட், சால்மன், காட் போன்ற மீன்களிலிருந்து தயாரிக்கப்படும் மீன் எண்ணெயில் இவை குறைவாகவே உள்ளன. எனவே, எந்தவகை மீனிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறதோ அதைப் பொறுத்தே அதில் உள்ள சத்துகளின் அளவு அமையும்.
05-Sep-2026
15-Aug-2026
15-Aug-2026
08-Aug-2026
08-Aug-2026