மே 8 ல் மீனாட்சி திருக்கல்யாணம், மே 9 ல் தேரோட்டம்
மே 8 ல் மீனாட்சி திருக்கல்யாணம், மே 9 ல் தேரோட்டம் / Madurai / Madurai Chithirai Festival Mugurthakall Planting Ceremony மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி கீழமாசி வீதி தேரடியில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து முகூர்த்தக்கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தேரடியில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்து முகூர்த்தகால் நடப்பட்டது. கோயில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திலும் முகூர்த்தக்கால் நடப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் கிருஷ்ணன் தலைமையில் செய்தனர். சித்திரை திருவிழா கொடியேற்றம் ஏப்ரல் 29ம் தேதி, மீனாட்சி பட்டாபிஷேகம் மே 6 ம் தேதி, மீனாட்சி திருக்கல்யாணம் மே 8ம் தேதி, மே 9ல் மீனாட்சி திருத்தேரோட்டமும் நடைபெறும்.