பூங்காவில் பொதுமக்கள் முன்னிலையில் துணிகரம்
திருநெல்வேலி, வஉசி பூங்காவுக்கு ஆயுதப்படை காவலர் முகமது ரஹ்மத்துல்லா குடும்பத்துடன் சென்றிருந்தார். அங்கு சில ரவுடிகள் ஒருவரை தாக்கி கொண்டு இருந்தனர். சாதாரண உடையில் இருந்த ரஹ்மத்துல்லா அவர்களை தட்டிக்கேட்டார். பாதிக்கப்பட்ட நபரை அங்கிருந்து அனுப்பி வைத்தார். அப்போது அந்த ரவுடிகள் ரஹ்மத்துல்லா கையை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். வெட்டுக்காயம் ஏற்பட்டு, ரத்தம் சொட்ட சொட்ட திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி நலம் விசாரித்தார். குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜூன் 23, 2025