உள்ளூர் செய்திகள்

ஒரு பள்ளி ஒரு பெருமை ஒரு கோரிக்கை

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் கிராமத்து இளைஞர்களுக்காக, விருதுநகர் பட்டம்புதுார் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படுகிறது புத்தக வங்கி. இப்பள்ளியில் படித்து முடித்து கிளம்பும் மாணவர்கள், தாங்கள் படித்த புத்தகங்களை அடுத்துவரும் மாணவர்களுக்கு தந்து உதவுகின்றனர். பள்ளி: எட்டநாயக்கன்பட்டி, பட்டம்புதுார், ராமசாமிபுரம், கோட்டநத்தம், ராமகுடும்பன்பட்டி, குப்பாம்பட்டி, மீனாட்சிபுரம் கிராமங்களின் கல்வி ஆதாரமாகத் திகழும் இப்பள்ளி, 'ஸ்மார்ட்' வகுப் பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், சுத்திகரிக்கப் பட்ட குடிநீர், சூரிய மின்சக்தி பயன்பாடு, அழகிய செ யற்கை நீரூற்று, ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழுடன் மிளிர்கிறது! பெருமை: 'என் அண்ணன் இப் பள்ளியின் முன்னாள் மாணவர். அவரது வழியில் இன்று நான் இங்கு பயில்கிறேன். எங்கள் பள்ளியின் விழா ஒன்றிற்கு விருந்தினராக வந்த மாவட்ட ஆட்சியர் பேசியதையும், அவருக்கு கிடைத்த மரியாதையையும் ஆச்சரியமாக பார்த்த என்னிடம், 'அவரைப் போல் ஆக வேண்டுமெனில் நீ ஐ.ஏ.எஸ்., முடிக்க வேண்டும்' என்றார் என் ஆசிரியர். இன்று, பேச்சுப் போட்டிகளில் சாதிக்கும் நான் கண்டிப்பாக மாவட்ட ஆட்சியர் ஆவேன்!' பா.ராமலட்சுமி, 7 ம் வகுப்பு கோரிக்கை: 'துவக்கப் பள்ளியாக இருந்து உயர்நிலைப் பள்ளியாக வளர்ந்து நிற்கும் இப்பள்ளியால், 10ம் வகுப்பு வரை எங்கள் பெண் பிள்ளைகளுக்கு படிப்பு நிச்சயம். ஆனால், பிளஸ் 2 படிக்க ஆறு கி.மீ., பயணம் அவசியம் என்பதால் மேற்படிப்பு தடைபடுகிறது. இப்பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டால் எங்கள் பிள்ளைகளின் வாழ்வு செழிக்கும்!'ப.திருசெல்வராஜா, தலைமை ஆசிரியர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !