உள்ளூர் செய்திகள்

மிஸ்டர் மூளைக்காரன் c/o தமிழ்நாடு

என்ன தம்பி... என் அக்னி நட்சத்திர ஆட்டத்தை தாங்க முடியலையா?அட நீங்க வேற... யோசிச்சு யோசிச்சு கொதிச்சு போயிருக்கிற மூளைக்கு தண்ணி காட்டுறேன் சூரிய பகவானே!பார்றா... அப்படி என்ன யோசனை?'என் அழைப்பால் வந்த சுற்றுலா பயணிகளை என்னால் காப்பாற்ற முடியவில்லை; மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகள் இல்லை! நம் மசூதிகளில் மவுன அஞ்சலி அனுசரியுங்கள்'னு ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கலங்கிப் பேசுறார்! ஆமா... இதுல உன் மூளை ஏன் சூடாகுது?இருங்க பகவானே; 'ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் பகுதி; ஹிந்துக்களுக்கு என இருக்கும் ஒரே நாடு இந்தியா; இங்கும்கூட ஹிந்துக்கள் வெளியில் செல்லக்கூடாது என்றால் எப்படி'ன்னு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கொந்தளிக்கிறார்!சரிப்பா... உன் மூளை எதுக்காக சூடாச்சு?இல்ல... 1997ம் ஆண்டு தஞ்சை பெரிய கோவில் கும்பாபிேஷக யாகப்பந்தல் தீ விபத்துல, கொத்து கொத்தா ஹிந்துக்கள் பலியான செய்தி வரவர அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி கதறி கதறி அழுதிருக்கார். 'தன் தாய் இறந்தபோதும், அண்ணாதுரை மறைந்தபோதும் மட்டுமே கதறி அழுதவர் அதற்குப்பின் அப்படி அழுதது இந்த துயரச் செய்தியில்தான்'னு அப்போ சொன்னாங்க! யாரு சொன்னாங்க?அவர் மனைவி தயாளு அம்மாள்!ஓ... சரிடா... ஆனா, இதுக்கும் உன் மூளை சூடாகுறதுக்கும் என்ன சம்பந்தம்?பகவானே... ஜம்மு - காஷ்மீர் முதல்வர் கேட்டுக்கிட்ட மாதிரியான மவுன அஞ்சலிக்கு இங்கே வேண்டுகோள் இல்லை; இறந்து போன ஹிந்துக்களுக்காக ஆந்திர துணை முதல்வர் குமுறுன மாதிரி யாரும் குமுறலை; ஹிந்துக்கள் இறப்புக்கு கதறி அழுத கருணாநிதி மாதிரி யாரும் அழுததா செய்தி இல்லை! அதான்... இதெல்லாம் ஏன்னு மூளை கொதிக்க கொதிக்க யோசிச்சிட்டு இருக்குறேன்!ஆக... வர்ற தேர்தல்ல உன் ஓட்டு யாருக்குன்னு... ஏய்... ஏன்டா அப்படி என்னை வெறிச்சுப் பார்க்குறே; டேய்... எதுக்கு இப்ப நீ ப்ளையிங் கிஸ்ஸ்ஸ்... ஓ... புரிஞ்சு போச்சுடா... புரிஞ்சு போச்சு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !