வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Manalan
ஜூலை 16, 2026 10:42
Please write to CM CELL
அலட்சியம் பறித்த திருமாங்கல்யம்செய்தி: மூடப்படாத நகராட்சி கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி பலி அநீதி: 'விபத்து நிவாரணம்' கோரிக்கையுடன் ஆட்சியருக்கு மனு அளித்தும் பலனில்லை முதல்வரே... 'மக்களுக்கு மட்டுமே இந்த ஆட்சி பயந்து செயல்படும்' என அடிக்கடி சொல்கிறீர்களே... அந்த மக்களில் ஒருத்தியாக இருந்து கேட்கிறேன்; எனக்கான நீதி எப்போது? முந்தைய ஆட்சியின் நிர்வாக அலட்சியத்தால் நிகழ்ந்த விபத்தில் என் 56 வயது கணவர் பாபுவை பறிகொடுத்து தவிக்கும் நான் கருமாரி. திருவள்ளூர் மாவட்டம் வள்ளுவர் புரத்தில் வசிக்கிறேன். மது அரக்கனிடம் சிக்கிய இளைய மகனை கடந்த ஜனவரி 3ம் தேதி நான் இழந்த நிலையில், என் துக்கம் வடிவதற்குள் அடுத்த பேரிழப்பு இது! சுமை துாக்கும் தொழிலாளியான என் கணவர், கடந்த பிப்ரவரி 21ம் தேதி தன் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, வடக்கு ராஜவீதி மாவட்ட சுகாதார அலுவலக நுழைவாயில் அருகே மூடப் படாமல் இருந்த கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து இறந்துவிட்டார். 'பி1' திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் 0084/2026 எண் கொண்ட முதல் தகவல் அறிக்கை பதிவாகி இருக்கிறது. நீதியாக உரிய நிவாரணம் கோரி பிப்ரவரி 23ம் தேதியன்று மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்ததற்கு, எண் 5613 கொண்ட ஒப்புகை சீட்டு கிடைத்தது. அதில், 'திருவள்ளூர் வட்டாட்சியர் 30 நாட்களுக்குள் மனுதார ருக்கு முடிவா ன பதில் அளித்தாக வேண்டும்' என மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது. முந்தைய அரசு தான் சொன்னதை செய்திருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா; நீங் களாவது சொன்னதைச் செய்வீர்களா? 99407 31853
Please write to CM CELL