உள்ளூர் செய்திகள்

நாங்க என்ன சொல்றோம்னா...: டென் ஹவர்ஸ்

உயிரற்ற கதாபாத்திரங்களின் ரேம்ப் வாக்! 'மகளை காணவில்லை' என்கிற தாயின் புகாரும், 'சென்னை - கோவை செல்லும் இரவு நேர பேருந்தில் ஒரு பெண்ணுக்கு ஆபத்து' என்கிற தொலைபேசி வழியிலான ஆணின் புகாரும் சேலம், ஆத்துார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கேஸ்ட்ரோவிடம் வருகிறது. விடிந்ததும் அய்யப்பன் கோவிலுக்கு செல்ல விருப்பவர் இரவு முடிவதற்குள் இரண்டிலும் துப்புதுலக்கும் கதை!'நான் நினைப்பதுதான் லாஜிக்; நான் சொல்வதுதான் கதை' என்கிற இயக்குனரின் புரிதலால் இஷ்டத்திற்கு உருட்டுகிறது திரைக்கதை. காணாமல் போன பெண்ணின் குடும்ப பின்னணியைக் கூடவா இன்ஸ்பெக்டர் விசாரிக்காமல் இருப்பார்! காணாமல் போனது இன்னாரின் மகள் என்று தெரிந்திருந்தால் அடுத்த காட்சியிலேயே 'க்ளைமாக்ஸ்' பார்த்திருக்கலாம்!'உடலை கடத்தினவங்க அதை ஏன் மருத்துவமனையிலேயே மறைச்சு வைக்கணும்' என்கிற கேஸ்ட்ரோவின் சந்தேகத்திற்கு விளக்கம் தருகிறார் உடற்கூறாய்வு மருத்துவர்; அதைக் கேட்டதும் 'வில்லன் வேதியியல் நிபுணர் போல' என்று நமக்குத் தோன்றுகிறது; வில்லனோ, சரக்கு பாட்டில், சிப்ஸ் பாக்கெட்டுடன் ஆர்வக்கோளாறில் ரவுடியிசம் செய்பவனாக இருக்கிறான்!'அவன் நம்மளை காட்டிக் கொடுக்க நினைச்சா போட்டுத் தள்ளிடு' என்கிற வில்லனின் அசைன்மென்டை ஏற்றுக்கொண்ட ஒரு அண்டர்கவர் பாத்திரம் வருகிறது. அப்பாத்திரம் நிகழ்த்தும் மாயத்தை, த்ரிஷ்யம் 3 படைக்கும் முன் ஜீத்து ஜோசப் பார்த்து தெளிவது உசிதமானது. இப்படி விதவிதமாக படையெடுக்கின்றன கதாபாத்திரங்கள்!காவல்துறையின் விசாரணை, தடயவியல் மற்றும் உடற்கூறாய்வு பிரிவின் செயல்பாடு, துப்பு தேடுதல், தொழில்நுட்ப சாத்தியங்கள் என எதைப்பற்றியும் தெளிவின்றி, எதையோ அள்ளிப்போட்டு எதையோ கிளறியிருக்கின்றனர்.ஆக....'ஹீரோயின், காதல், டூயட் வைக்காது விட்ட உங்கள் கருணைக்கு நன்றி இயக்குனரே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !