உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / பெல்ஜியம் மலினோய்ஸ் துப்பறிதலில் அசகாயசூரன்!

பெல்ஜியம் மலினோய்ஸ் துப்பறிதலில் அசகாயசூரன்!

கோவை, சூலுாரில் 'பெல்ஜியம் மலினோய்ஸ்'காக மட்டுமே தனி கென்னல் நடத்தும் குமரேஷ் கூறியதாவது: ''எனக்கு சின்ன வயசுல இருந்தே டாக்ஸ் பிடிக்கும். நிறைய கண்காட்சிக்கு போயிருக்கேன். அங்க என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணது தான், இந்த பெல்ஜியம் மலினோய்ஸ் ப்ரீட். அதோட தலை, துறுதுறுன்னு இருக்கற கண்ணு, ஸ்கின் கோட், ஆக்டிவ்வான நேச்சர பாத்ததும், இந்த ப்ரீட் தான், என்னோட பெட்னு முடிவு செஞ்சேன். ஆனா, இதோட விலை ரொம்ப காஸ்ட்லி.பிசினஸ் ஆரம்பிச்சு சம்பாதிச்சதும், நல்ல ப்ரீடரா தேடி புடிச்சு, ஒரு மலினோய்ஸ் வாங்குனேன். மூணு வருஷத்துக்கு முன்னாடி இதோட விலை ரூ. 70,000. இப்போ என்கிட்ட 8 மலினோய்ஸ் இருக்கு. எல்லா டாக் ஷோலயும் என் ப்ரீட்ஸ் என்ட்ரீ ஆகி, மெடலை தட்டி துாக்கிடும். 20க்கும் மேல, பெஸ்ட் ஆப் ப்ரீட் அவார்டு வாங்கியிருக்கு,'' என்றார்.

இந்த ப்ரீடோட நேச்சர் எப்படி?

ரொம்ப ஆக்டிவ்வான ஹன்ட்டிங் ப்ரீட். பாலைவனம்- பனி பிரதேசம் வரை, எல்லா க்ளைமேட்லயும் வளரும். மிலிட்டரி, போலீஸ் ஸ்குவாடுல, இந்த ப்ரீட தான், ஒர்க்கிங்குக்கு பயன்படுத்துறாங்க. அவ்ளோ எனர்ஜிட்டிக்கானது.டெய்லி மார்னிங், ஈவினிங், எலக்ட்ரிக் சைக்கிள்ல நானும், ஏதாவது ஒரு டாக்கும், 10 கிலோமீட்டர் வரைக்கும் போவோம். மத்த டாக்ஸ், தோப்புக்குள்ள விளையாடுவாங்க. இந்த ப்ரீட, கட்டிப்போட்டு வைச்சா ஸ்ட்ரஸ் ஆகிடும். ஏதாச்சும் வேலை கொடு-ங்கற ரியாக் ஷன்லயே, எப்போவும் இருக்கும். இது இருக்கற தைரியத்துல தான், தோப்புக்குள்ள தனியா குடியிருக்கோம். இதோட டைம் ஸ்பென்ட் பண்றதால, வெளியூருக்கு கூட போக முடியறதே இல்ல. அவ்ளோ பிசியாகிட்டேன். என்னை மாதிரியே, இந்த ப்ரீட் மேல கிரேஸ் இருக்கறவங்களுக்கு மட்டும் தான், பப்பிஸ் கொடுக்குறேன். இப்போ, யங் குரூப்ஸோட, பேவரட் ப்ரீடா இதுதான் இருக்கு,''.தோப்புக்குள்ள தனியா வீடு இருக்கேன்னு யாரும் எட்டிபாத்துடாதீங்க...விழவச்சிடும் குப்புற!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ