உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / டாக்டர்ஸ் கார்னர்: கோடை கால உணவு பூனைக்கு இத கொடுங்க

டாக்டர்ஸ் கார்னர்: கோடை கால உணவு பூனைக்கு இத கொடுங்க

கோடைக்காலத்தில் பூனைகளை எவ்வாறு பராமரிப்பது, நோய் தடுப்பு முறைகள் என்ன?ஆர்.சத்யா, கோவை.பூனைகளால் அதீத வெப்பம், குளிர் தாங்க முடியாது. மிதமான வெப்பநிலை தான் ஏற்றது. 'சம்மர்' தொடங்கிவிட்டதால், ஏ.சி., பேன் அல்லது காற்றோட்டமான சூழலை அமைத்து தருவது அவசியம். பூனைகளுக்கு அதிக முடி இருப்பதால் பிரத்யேக சீப்பு கொண்டு சீவிவிடுவது அவசியம். இல்லாவிடில் தோலின் வெப்பநிலை அதிகரிக்கும்.இவை தன்னைத்தானே சுத்தப்படுத்தி கொள்வதால், 15 நாட்களுக்கு ஒருமுறை குளிப்பாட்டி விட்டால் போதுமானது. இதற்கு பிரத்யேக ஷாம்பு, சோப்பு கிடைக்கின்றன. குளிப்பாட்டி விட்டதும் ஈரத்துடன் விடாமல் முடியை 'டிரை' செய்யணும். இக்காலத்தில் நீர்ச்சத்து உணவு கொடுப்பது நல்லது. ரெடிமேட் வெட் புட், கடைகளில் கிடைக்கின்றன. வீட்டிலிருந்து உணவு தயாரித்து தருவதாக இருந்தால் 'செமிசாலிட்' உணவுகளை கொடுக்க வேண்டும். தன் பசிக்கு தேவையான உணவை மட்டுமே பூனை சாப்பிடும். அருகே, சுத்தமான பவுலில், தண்ணீர் வைத்தால், அடிக்கடி குடித்து கொள்ளும்.வெயில்காலத்தில் பொதுவாக, 'இயர் மைட்ஸ்' காதுகளில் பூச்சிகள் இருத்தல், பூஞ்சை தொற்று, தோல் அழற்சி நோய்கள் வரும். மருத்துவரை அணுகி, உரிய சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். தடுப்பூசி, குடல் புழு நீக்கம், மருத்துவரின் ஆலோசனைப்படி, உரிய கால இடைவெளியில் போட்டு கொள்வதால், பூனைகள் ஆரோக்கியமாக வளரும்.- எஸ்.பிரேம்குமார், கால்நடை மருத்துவர், கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை