உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / மும்பையில் பெட் ப்வெட்-2024 - செல்லப்பிராணிகளுக்கான கோலாகல திருவிழா!

மும்பையில் பெட் ப்வெட்-2024 - செல்லப்பிராணிகளுக்கான கோலாகல திருவிழா!

இந்தியாவின் மாபெரும் செல்லப்பிராணி கள் திருவிழாவான, 'பெட் ப்வெட் மும்பை, கொரேகான், நெஸ்கோ விஐபி மைதானத்தில் இன்று துவங்கி நாளை வரை நடக்கிறது. செல்லப்பிராணி வளர்ப்போருக்கான கொண்டாட்டமாக திகழும் இந்த விழா வில், பல்வேறு பெட்ஸ் கேம்ஸ், பெட்ஸ் டேலன்ட் ஷோ, பேஷன் ஷோ, ஆக்டிவிட்டிஸ், பிளே ஜோன் ஏரியா, 'இன்டர்நேஷனல் கேட்ஸ் ஷோ' உள்ளிட்ட பல்வேறு கலக்கல் நிகழ்வுகள் சுளைகட்டுகின்றன.டிரஸ்,கூலர்ஸ்,டாய்ஸ்உள்படசெல்லப்பிராணிகள்சம்பந்தமானநூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்களும் இடம்பெற்றுள்ன. பெட் வளர்ப்போர் தங்களது செல்லப் பிராணியுடன் பங்கேற்று கொண்டாட மும்பையில் முகாமிட்டுள்ளனர். இவ்விழா வின் சிறப்புஅம்சம் என்னவென்றால் விழாவில் பார்வையாளர்களாக வருவோர், தங்களுக்கான 'பெட்'டையும் தத்தெடுத்துச் செல்லலாம் என்பது.மும்பையை தொடர்ந்து நாட்டின் முக்கிய நகரங்களிலும் 'பெட் ப்வெட்' விழா நடக்கிறது.புனேவின் 'வெஸ்டர்ன் மாலில்' வரும் பிப்.,10, 11 தேதிகளிலும், சண்டி கர் எலண்டே மாலில் வரும் பிப்., 24, 25 தேதிகளிலும் நடக்கிறது. இதேபோல், ஐதரா பாத்திலுள்ள டிஎஸ்எல் மாலில், மார்ச் 16, 17 தேதிகளில் நடக்கிறது. இந்த விழாக்களில் பங்கேற்க petfed.org என்ற இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளலாம் என்றும், 9560475676 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை