| ADDED : மார் 02, 2024 10:27 AM
பெட் லவ்வர்ஸ்க்கு ட்ரீட் கொடுக்கற மாதிரி கோவையை சேர்ந்த டாக், ரெமோவை நடிக்க வைச்சு, 'ஸ்கூபி'ங்கற மியூசிக் ஆல்பம், சென்னையில வெளியிட்டு இருக்காங்க.''இந்த உலகத்துல எந்த எதிர்பார்ப்பும் இல்லாம கிடைக்கற அன்பு, செல்லப்பிராணிகளோடது மட்டும் தான். இதை மையப்படுத்தி பெட் வளர்ப்பில் அனுபவமில்லாத ஹீரோவோட ஆக்சிடன்ட்டா கனெக்ட் ஆகுற ஒரு 'டாக்'கை வைத்து, கான்செப்ட் உருவாக்கினேன். 'நக்லைட்ஸ்' யூ-டியூபர் அருண்குமாரோட, ஹீரோவா இணைஞ்சிருக்கு, கோவையை சேர்ந்த உமாமகேஸ்வரனோட செல்லப்பிராணி ரெமோ. இது, 'டிரெயின்டு டாக்'ங்கறதால ஷூட் பண்றதுக்கு, எந்த சிரமமும் ஏற்படலை. இந்த கான்செப்ட்டுக்கு ஏத்தமாதிரி, ரகுராம கிருஷ்ணா, யூத்புல்லா மியூசிக் கம்போஸ் பண்ணியிருக்கார். கோவை, திருச்சூர் தான், ஆல்பத்தோட ஷூட்டிங் ஸ்பாட். எல்லாரும் ரசிக்கும்படியா, என்னோட காட்சிகள உருவாக்கியிருக்கார் கேமராமேன், வைசக் பவித்ரன். 'மியூசிக் ஆப்', சீசா (seesaw) யூ-டியூப் சேனல்ல, இந்த பாட்டை கேட்டு, பாத்து ரசிக்கலாம்,'' என்கிறார் இயக்குனர் மகேஸ்வரன்.