மேலும் செய்திகள்
மாமூல் வசூலிக்கும் சார் யாரு?
11-Nov-2025
ரெ யின் கோட், ஹெல்மெட் அணிந்து கொண்டு, ஸ்கூட்டரில் நகர்வலம் புறப்பட்டாள் சித்ரா. பின்இருக்கையில் அமர்ந்த மித்ரா, ''என்னக்கா, செம்மொழி பூங்கா ஓபன் பண்றாங்களாமே; சி.எம்., வர்றாராமே...'' என, கேட்டாள். ''ஆமா, மித்து! போன மாசம் புத்தொழில் மாநாடு நடந்தப்போ, அடுத்த மாசம் மறுபடியும் வருவேன். அப்போ, செம்மொழி பூங்காவை திறந்து வைப்பேன்னு சொன்னாரு. அவர் சொன்ன சமயத்துல ஏகப்பட்ட வேலை முடியாம இருந்துச்சு. சி.எம்., அறிவிப்பை கேள்விப்பட்டதும், கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் ஷாக் ஆகிட்டாங்க. இருந்தாலும், சொன்ன தேதியில ஓபன் பண்ணியே ஆகணும்னு, கவர்மென்ட் தரப்புல உறுதியா இருந்ததுனால, கார்ப்பரேஷன்ல இருக்கற இன்ஜினியர்கள் பட்டாளத்தை பூங்கா ஒர்க்குல இறக்கி விட்டு, ராப்பகலா வேலை பார்த்துட்டு இருக்காங்க. ஒவ்வொரு ஆபீசருக்கும் ஒரு வேலை ஒதுக்கியிருக்காங்க. புதுசா 16 கான்ட்ராக்டர்ஸ்க்கு 'ஒர்க்' கொடுத்து, அவசர அவசரமா செஞ்சிருக்காங்க. அதுக்கெல்லாம் 'யார்' பில் எழுதுறதுன்னு இன்ஜி.,களுக்குள் முட்டல், மோதல், உரசல் நடந்துட்டு இருக்கு,'' ''வி.ஐ.பி.,களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறதா சொன்னாங்களே...'' ''நீ கேட்கறது கரெக்ட்டுதான்! இயற்கை வேளாண் மாநாட்டுக்கு பிரைம் மினிஸ்டர் மோடி வந்திருந்தாரு. அந்த பங்சன்ல பார்வையாளர்கள் பகுதியில இருந்த பள்ளி குழந்தைகள், பிரதமரை பார்த்து கையசைச்சு, வாசகங்கள் எழுதிக் கொண்டு வந்திருந்த பதாகையை காண்பிச்சாங்க. அதை கவனிச்ச பிரைம் மினிஸ்டர், அந்த குழந்தைகள்கிட்ட இருந்து பதாகைகளை வாங்கிட்டு வரச்சொல்லி, பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாரு. அதுக்கப்புறம், வேளாண் விஞ்ஞானிகள் கிட்ட பேசினாரு,'' ''அதே மாதிரி, சி.எம்., கலந்துக்கிற செம்மொழி பூங்கா பங்சன்லயும் ஏற்பாடு செய்யச் சொல்லியிருக்காங்க. அதுக்காக, ஸ்கூல் ஸ்டூடன்ஸ்களுடன் சந்திப்பு, 150 வி.ஐ.பி.,களுக்கு அழைப்பு விடுத்திருக்காங்க. பங்சன்ல சி.எம்., 30 நிமிடம் இருப்பாருன்னு நேரம் ஒதுக்கியிருக்காங்க. அடுத்த நிகழ்ச்சிக்கு ஈவ்னிங் வரை டைம் இருக்கறதுனால, செம்மொழி பூங்கா வளாகத்துக்குள்ள, கூடுதல் நேரம் இருப்பாருன்னு எதிர்பார்க்குறாங்க,'' எலுமிச்சம்பழம் ''ஏர்போர்ட்டுல அண்ணாமலை முதுகுல பிரைம் மினிஸ்டர் ஒரு தட்டு தட்டுனாரே... எதுக்குன்னு விசாரிச்சீங்களா...'' ''அதுவா... பிரைம் மினிஸ்டரை வரவேற்கறதுக்கு, ஏர்போர்ட்டுக்குள்ள கவர்னர்ல இருந்து பலரும் வரிசையா நின்னுட்டு இருந்தாங்க. கலெக்டர், போலீஸ் கமிஷனருக்கு அப்புறம் நின்னுக்கிட்டு இருந்த அண்ணாமலை, பிரைம் மினிஸ்டரை பார்த்தும், பவ்யமா குனிஞ்சு, சின்னதா ஒரு எலுமிச்சம்பழம் கொடுத்தாரு. அதைப்பார்த்து சிரிச்ச பிரைம் மினிஸ்டர், கமென்ட் அடிச்சபடி செல்லமா முதுகுல தட்டிக் கொடுத்தார். பக்கத்துல இருந்த ஆபீசர்ஸ் அதைப்பார்த்து சிரிச்சாங்க. 'அயர்ன் மேன்...'னு பிரைம் மினிஸ்டர் சொன்னதா, தன்னோட சகாக்கள்கிட்ட அண்ணாமலை சொல்லி, புளங்காகிதம் அடைஞ்சிருக்காரு,'' சிங்கமும், பூனைகளும்! ''அதெல்லாம் இருக்கட்டும். ஏ.டி.எம்.கே., மீட்டிங்ல ஆளுங்கட்சிக்காரங்களை வெளுத்து வாங்குனாங்களாமே...'' ''ஆமாப்பா, இதயதெய்வம் மாளிகையில நடந்த பங்சன்ல, புறநகர் மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி., ஆளுங்கட்சிக்காரங்களை பத்தி பேசுனாரு. அப்போ, 'அந்த கட்சி, இந்த கட்சின்னு வெவ்வேற இடத்துல இருந்து போனவங்களே, தி.மு.க.,வுல முக்கிய பொறுப்புல இருக்காங்க. விரக்தியில இருக்கறவங்கள, நம்ம கட்சிக்காரங்க பயன்படுத்திக்கிடணும்... 10 தொகுதியை கைப்பத்தப் போறோம், சிறுத்தை, சிங்கம்னு பேசிக்கிறாங்க. சிங்கம் நம்ம கட்சியில தான் இருக்கு. அங்க இருக்கறவங்க எல்லாரும் பூனைக்குட்டிகள்' என்றதும், ரத்தத்தின் ரத்தங்கள் கைதட்டி, ஆரவாரம் செஞ்சிருக்காங்க,'' ஆளுங்கட்சி களையெடுப்பு ''ஏ.டி.எம்.கே.,காரங்களோட நெருக்கம் காட்டுனதா சொல்லி, ஆளுங்கட்சி நிர்வாகி ஒருத்தரோட கட்சி பதவியை நீக்குனதா, அறிவிப்பு வந்துச்சே...'' ''அதுவா... சென்னையில 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சி நடந்துட்டு வருது. முக்கியமான நிர்வாகிகளை முதல்வர் சந்திச்சு பேசுறாரு. நம்மூர்ல இருக்கற நிர்வாகிகளை பத்தி, மேற்கு மண்டல பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் சொல்லியிருக்காரு. உடனே, கட்சியை விட்டு நீக்கி, அறிவிப்பு வெளியாகிடுச்சு,'' ''இதுல, காரமடை நகர செயலாளரா இருந்த வெங்கடேஷ், மேட்டுப்பாளையம் நகர செயலாளரா இருந்த யூனிஸ் மேல, ஏகப்பட்ட 'கம்ப்ளைன்ட்' கட்சி தலைமைக்கு போயிருக்கு. கோஷ்டி பிரச்னை உருவாகிட்டு வர்றது தெரிஞ்சதும், ரெண்டு பேரு பதவியையும் பறிச்சிட்டாங்க. இதே மாதிரி, கோவைப்புதுார் ஏரியாவைச் சேர்ந்த நிர்வாகி பதவிய பறிச்சிட்டு, புதுசா ஒருத்தருக்கு கொடுத்திருக்காங்க,'' ''சிட்டியில மாநகர் மாவட்ட செயலாளர் பதவியை பறிச்சாங்க. இப்போ, காரமடை, மேட்டுப்பாளையம்னு முக்கியமான இடத்துல இருக்கற நிர்வாகிகளை துாக்கிட்டாங்க. களையெடுப்பு வேலையை தலைமை ஆரம்பிச்சிருக்கறதுனால, அடுத்தடுத்து எந்தெந்த தலைகள் உருளுமோன்னு உடன்பிறப்புகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுருக்கு,'' என்றபடி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குள் நுழைந்த சித்ரா, பார்க்கிங் ஏரியாவில் ஸ்கூட்டரை நிறுத்தினாள். ஒரே இடத்தில் ஏழு வருஷம் ''அக்கா...ஒரு போலீஸ் மேட்டர் சொல்றேன்'' என்ற மித்ரா, ''நம்மூர் ஆயுதப்படையில இருக்கற நான்கெழுத்து லேடி எஸ்.ஐ., ஒருத்தரு, ஏழு வருஷமா கேன்டீன் கவனிக்கிற பொறுப்புல இருக்காராம். அதுக்கப்புறம் நேரடி எஸ்.ஐ., எக்ஸாம் எழுதி, 'பாஸ்' ஆகிட்டாங்க. அவரை ஆயுதப்படையில எஸ்.ஐ.,யா 'டியூட்டி' போட்டிருக்காங்க. இருந்தாலும், கேன்டீன் பொறுப்பை விட்டுட்டுப் போக அவுங்களுக்கு மனசில்லை. உயரதிகாரிகளை பிடிச்சு, இப்பவும் அவரே பொறுப்பாளரா இருக்காராம். ஏழு வருஷமா ஒருத்தரே அந்த பொறுப்புல இருக்கறதுனால, அவருக்கும், உயரதிகாரிகளுக்கும் 'டீலிங்' இருக்குமோங்கிற சந்தேகம், ஆயுதப்படை போலீஸ்காரங்க மத்தியில கிளம்பியிருக்கு,'' ''அதிருக்கட்டும், போலீஸ் ஆபீசர்ஸ் மேல நீலாம்பூர் பப்ளிக் கோபமா இருக்காங்களாமே... ஏனாம்...'' ''ஆமாக்கா, நீலாம்பூர்ங்கிற பெயருல திறக்கப் போற போலீஸ் ஸ்டேஷனுக்கு, அரசூர்ல பில்டிங் செலக்ட் பண்ணியிருக்காங்க. ஏர்போர்ட் நுழைவாயில் நீலாம்பூர்ல வரப்போகுது. மெட்ரோ ஜங்சன், டிப்போ நீலாம்பூர்ல வரப்போகுது. எதிர்காலத்துல இந்த ஏரியாவே தலைகீழா மாறிடும். மக்கள் நெருக்கம், போக்குவரத்து ஜாஸ்தியாகிடும். அப்போ, போலீஸ் ஸ்டேஷன் நீலாம்பூர்ல தானே இருக்கணும்; எதுக்கு அரசூர்ல வைக்கிறாங்கன்னு, பப்ளிக் சைடுல கேள்வி எழுந்திருக்கு...'' என்றாள் மித்ரா. திட்டிய சேர்மன் கமிஷனர் அலுவலகத்துக்குள் சென்று இன்ஸ்., ஒருத்தரை சந்தித்து விட்டு வந்த சித்ரா, ''வடக்கு பகுதியில இருக்கற, ஆளுங்கட்சியை சேர்ந்த ஏழு எழுத்து டவுன் பஞ்சாயத்து சேர்மன் ஒருத்தரு, கவர்மென்ட் ஊழியர்களை தகாத வார்த்தைகளால திட்டிட்டாராமே...'' என, 'ரூட்' மாறினாள். ''ஆமாக்கா, நானும் கேள்விப்பட்டேன். அவருடைய வார்டுல மட்டும் எல்லா வேலையும் செஞ்சிக்கிறாராம். ரெண்டு நாளைக்கு முன்னாடி, குடிநீர் குழாய் ரிப்பேர் ஆகியிருக்கு. அதை சரி செய்றதுக்காக, கான்கிரீட் ரோட்டை தோண்டியிருக்காங்க. இதை கேள்விப்பட்டதும், கான்கிரீட் ரோட்டை ஏன் உடைச்சிங்கன்னு ஊழியர்களை தகாத வார்த்தைகளால சேர்மன் திட்டி, அர்ச்சனை செஞ்சிருக்காரு. ஆளுங்கட்சியை சேர்ந்தவருங்கிறதுனால, யார்கிட்ட கம்ப்ளையின்ட் பண்ணுறதுன்னு தெரியாம, டவுன் பஞ்சாயத்து ஊழியர்கள் புலம்பிட்டு இருக்காங்க,'' ''அப்படியா... '' என, கேட்டபடி, பார்க்கிங் ஏரியாவுக்குச் சென்ற சித்ரா, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள். பின்இருக்கையில் அமர்ந்த மித்ரா, ''கம்பெனியில வேலைபார்க்குற குழந்தை தொழிலாளர்களை மீட்டாலும், போலீஸ் தரப்புல ஆக்சன் இருக்கறதில்லையாமே...'' என, கேட்டாள். ''ஆமா, மித்து! கொஞ்ச நாளைக்கு முன்னாடி, தொண்டாமுத்துார் ஏரியாவுல பாக்கு ஷெட்டுல வேலை பார்த்திட்டு இருந்த குழந்தை தொழிலாளர்களை, லேபர் டிபார்ட்மென்ட்டுக்காரங்க மீட்டு காப்பகத்துல சேர்த்தாங்க. கம்பெனி உரிமையாளர் மேல ஆக்சன் எடுக்கணும்னு, தொண்டாமுத்துார் போலீஸ் ஸ்டேஷன்ல லேபர் டிபார்ட்மென்ட்டுல இருந்து, 'கம்ப்ளைன்ட்' கொடுத்திருக்காங்க. கம்ப்ளைன்ட் ரசீது மட்டும் கொடுத்துட்டு, எப்.ஐ.ஆர்., போடாம இருக்காங்க. அந்த ஏரியாவுல இருக்குற பாக்கு ஷெட்கள்ல, இன்னும் குழந்தை தொழிலாளர்கள் இருக்காங்க. போலீஸ் தரப்புல ஏன் ஆக்சன் எடுக்கறதில்லைன்னு கேள்வி எழுந்திருக்கு,'' என்றபடி, கார்ப்பரேஷன் ஆபீஸ் நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.
11-Nov-2025