மேலும் செய்திகள்
டொயோட்டா 'கேம்ரி' 'கேம் சேஞ்சர்' செடான்
18-Dec-2024
லஞ்சம் வாங்க தனியறை... 'வெளங்குமா' கனிமவளத்துறை!
26-Nov-2024
'கியா' நிறுவனம், 'சிரோஸ்' என்ற புதிய எஸ்.யூ.வி., காரை அறிமுகப்படுத்தி உள்ளது. 'சோனெட்' காரை தொடர்ந்து, இது இரண்டாவது 4-மீ சப் காம்பேக்ட் எஸ்.யூ.வி., கார் ஆகும்.இந்த கார், கியா நிறுவன உலக அணிவகுப்பில் உள்ள 'இ.வி., 9' மற்றும் 'இ.வி., 3' கார்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய 'டைகர் நோஸ்' கிரில், 17 அங்குல அலாய் சக்கரங்கள், 'எல்' வடிவ டெயில் லைட்டுகள், உயரமான மற்றும் அகலமான டிசைன் ஆகியவை இதை தனித்துவப்படுத்துகிறது.சோனெட் காரை விட, 50 எம்.எம்., வீல் பேஸ், 10 எம்.எம்., அகலம், 55 எம்.எம்., உயரம், 80 லிட்டர் பூட் ஸ்பேஸ், பின்புற இட வசதி ஆகியவை அதிகமாக உள்ளன. மேலும், இரு வரிசை வென்ட்டிலேட்டட் சீட்டுகள், பானரோமிக் சன்ரூப், பின்புற 'ஸ்லைடிங் மற்றும் ரிக்லைன்' சீட்டுகள், 30 அங்குல டூயல் டிஸ்ப்ளே ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.மற்றபடி, சோனேட் காரில் உள்ள அதே இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் முன்பதிவு ஜனவரி 3ம் தேதி ஆரம்பமாக உள்ள நிலையில், வினியோகம் பிப்ரவரி முதல் துவங்குகிறது.
இன்ஜின் 1 லிட்டர், 3 சிலிட்டர், டர்போ பெட்ரோல் 1.5 லிட்டர், 4 சிலிண்டர், டீசல்பவர் 120 ஹெச்.பி., 116 ஹெச்.பி.,டார்க் 172 என்.எம்., 250 என்.எம்.,பூட் ஸ்பேஸ் 465 லிட்டர்
18-Dec-2024
26-Nov-2024