உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / அழகான கட்டுமானத்துக்கு உதவும் எலிவேஷன் டிசைன்! எப்படி இருக்கும் என்று விளக்குகிறார் பொறியாளர் 

அழகான கட்டுமானத்துக்கு உதவும் எலிவேஷன் டிசைன்! எப்படி இருக்கும் என்று விளக்குகிறார் பொறியாளர் 

''எலிவேஷன் டிசைன் செய்யும் போது, பொறியாளர்களுக்கு எலிவேஷன் மாறாதவாறு அதனுடன் வலிமை, ஸ்திரத்தன்மை, நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாதவாறு கட்டடத்தை அமைக்க உதவுகிறது,'' என்கிறார், கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம் (காட்சியா) செயற்குழு உறுப்பினர் டேனியல்.இதுகுறித்து, அவர் கூறியதாவது: கட்டுமான உலகில் ஒரு கற்பனையை நிஜமாக்குவதற்கும், தற்போது முடிக்கப்பட உள்ள கட்டடம் எப்படி காட்சியளிக்கும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு தான், எலிவேஷன் டிசைன்.கட்டடத்தின் வெளிப்புற விபரங்கள், அளவுகள், பரிமாணங்கள் மற்றும் பூச்சுகள் ஆகியவற்றை துல்லியமாக செயல்படுத்த, கட்டுமான குழுக்களுக்கு உதவுகிறது. இதனால், ஒரு திறமையான, அழகான கட்டுமான செயல்முறை கிடைக்கும். எலிவேஷன் டிசைன்களில் ஜன்னல்கள், கதவுகளின் இடம், அளவு ஆகியவை இடம்பெறும்.கட்டடத்தின் வெளிப்புற வடிவமைப்பை, பற்றிய தெளிவான பார்வையை கொண்டிருப்பதன் வாயிலாக, கட்டுமானத்தின் போது பொறியாளர்கள் தவறுகளை தவிர்க்கலாம். மறுவேலை வடிவமைப்பில் மாற்றங்களை தடுப்பதால், நேரத்தையும், பணத்தையும் சேமிக்க முடியும். எலிவேஷன் டிசைன் கூரை வடிவமைப்பு, சாய்வு கூரை போன்ற அம்சங்களையும் காட்டுகிறது. இந்த டிசைன், செங்குத்து பரிமாணங்கள், மாடிகளின் எண்ணிக்கை போன்றவற்றை விளக்குகிறது.எலிவேஷன் டிசைன் வரைபடத்தில், அழகுப்படுத்தும் பொருட்களை பற்றிய தகவல்களை, அதாவது Stucco tiles, Texture painting, ACP, HPL Sheet, Glass, Stainless Steel போன்ற பொருட்களை பயன்படுத்தும் முறைகளை அறிந்து கொள்ளலாம். இதனால், பொறியாளர்களுக்கும், வீட்டின் உரிமையாளர்களுக்கும் வேலைகளை எளிதாக்குகிறது. கட்டடத்தின் கழிவறைகளின் குழாய்களை, பொருட்களை பொருத்தி கட்டட முகப்பின் அழகை மேம்படுத்தவும் எலிவேஷன் டிசைன் பயன்படுகிறது. இந்த டிசைன்களில், கட்டடத்தின் வண்ணம் எவ்வாறு இருக்கும் என்றும் நம் அறியலாம். பெரிய பட்ஜெட், அழகான பொருட்கள் அல்லது பெரிய இடம் ஆகியவை அனைவரையும் கவர்ந்திழுக்கும் என்பதற்காக மட்டும் இல்லை. வீட்டின் அமைப்புகள், அழகு அதன் வணிக மதிப்பையும் மேம்படுத்தும் என்பதற்காகவும் பயன்படுகின்றன. மிக முக்கியமாக, எலிவேஷன் டிசைன் செய்யும் போது, பொறியாளர்களுக்கு எலிவேஷன் மாறாதவாறு அதனுடன் வலிமை, ஸ்திரத்தன்மை, நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாதவாறு கட்டடத்தை அமைக்க உதவுகிறது. மின்விளக்குகள் மற்றும் அழகிய உபகரணங்கள் கொண்டும் கட்டடத்தை அழகுப்படுத்தலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை