உள்ளூர் செய்திகள்

கருவிலும் பிரதிபலிக்கும் மாற்றம்!

பிரசவ நேரத்தில் கர்ப்பிணியை தயார்படுத்தும் மகளிர் நல மருத்துவராகத் தான் இருந்தேன். பிரசவத்திற்கு பின், தாய் எதிர்கொள்ளும் சவால்களைப் பார்த்த போது, இதற்கு தீர்வு சொல்லும் விதமாக ஏன் சிறப்பு பயிற்சி பெறக் கூடாது என, தோன்றியது. அப்படித்தான் கடந்த 10 ஆண்டுகளாக மகளிர் நலத்துடன் சேர்த்து, தாய்ப்பால் ஆலோசகராகவும் இருக்கிறேன்.டாக்டர்கள்நாங்கள் மருத்துவத்தில் படிப்பதற்கும், நடைமுறை அனுபவத்திற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. புத்தகத்தில், ஒவ்வொரு மாதமும் குழந்தையின் எடை சீராக இத்தனை கிராம் என அதிகரிக்க வேண்டும்; ஆரோக்கியமான குழந்தை இப்படி இருக்க வேண்டும் என்று தான் இருக்கும். குழந்தையின் தினசரி தேவைகள் என்பது வேறு.மகப்பேறு, குழந்தைகள் நல மருத்துவர்கள் தங்களின் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த அனுபவங்களைக் கேட்டால், அவர்களும் ரொம்ப கஷ்டப்பட்டேன் என்று தான் சொல்வர். நடைமுறை விஷயங்களில் சரியான புரிதல் இல்லாததால் ஏற்பட்ட பிரச்னை இது.குழந்தையை கைகளில் துாக்கி வைக்கத் தெரியவில்லை; இரவில் அடிக்கடி எழுந்து தாய்ப்பால் தர முடியவில்லை என்பது தான் பொதுவான பிரச்னை. தன் அம்மா சொல்லி எந்த விஷயத்தையும் கேட்காத பெண் கூட, இரவில் குழந்தை துாங்காமல் அழுதால், உன் குழந்தை தான் இப்படி அழுகிறது. நான் இப்படி பார்த்ததே இல்லை. பால் போதவில்லை என்று என் அம்மா சொல்றாங்க. தாய்ப்பால் குடித்த சிறிது நேரத்தில் திரும்பவும் அழுகிறது. இரவு நேரத்தில் மட்டும் புட்டிப் பால் கொடுக்கட்டுமா ...என கேட்பர். தாய்ப்பாலை இன்னொரு முறை கொடுக்கலாமே என்றால், எத்தனை முறை தருவது என கேட்பர்.வாழ்க்கை முறைவயிற்றில் இருக்கும் குழந்தையின் இயக்கத்தை பெரும்பாலும் இரவு நேரத்தில் உணர்வதாகவே இளம் பெண்கள் சொல்வர். பகலில் அமைதியாக இருக்கும். நம்முடைய வாழ்க்கை முறைக்கு ஏற்றாற்போல், கருவில் இருக்கும் குழந்தையின் துாக்க நேரமும் மாறி விட்டது.துாக்கமின்மை என்பது வேலை செய்யும் பெண்களுக்கு மட்டுமல்லாமல், வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் பிரச்னையாக இருக்கிறது. இரவில் நீண்ட நேரம் 'டிவி' பார்ப்பது, மொபைல் போனில் பேசுவது, இரவு வேலை என பல காரணங்கள் உள்ளன. இப்படி செய்யாதீர்கள் என சொல்லவும் முடியாது. வாழ்க்கை முறை மாற்றத்திற்கு ஏற்ப மாறும் போது, அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.டாக்டர் ஜெயஸ்ரீ ஜெயகிருஷ்ணன், தாய்ப்பால் சிறப்பு மருத்துவ ஆலோசகர், போர்டிஸ் மலர் மருத்துவமனை, சென்னை98408 52678jai_sriphysio@yahoo.co.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்