சைனஸ் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு!
முன் நெற்றி, இரண்டு புருவங்களின் உட்புற மேல்பகுதி, இரண்டு கண்களின் கீழ், மூக்கின் பக்கவாட்டு மேல் பகுதியில் காணப்படும் அறைகளில், சைனஸ் திசுக்களில் தொற்று கிருமிகளால் நீர் கோர்த்து வீங்கி வேதனையை உண்டாக்குவது தான் 'சைனசைட்டிஸ்!' வைரஸ், பாக்டீரியா தொற்றால், உடலில் எதிர்ப்பு சக்தி குறைவது, போதிய துாக்கம் இல்லாமல் இருப்பது, கலப்பட, நாள்பட்ட, பதப்படுத்தப்பட்ட, செயற்கை வண்ணங்கள் கலந்த உணவு, தின்பண்டங்களை அடிக்கடி பயன்படுத்துவது, தரமற்ற வாசனை திரவங்களை பயன்படுத்துவது, நாள்பட்ட செயற்கை மணமூட்டிகள் சேர்த்த தைலங்களை தொடர்ந்து பயன்படுத்துவது, தரமற்ற கலப்பட சாம்பிராணி, ஊதுவத்தி, கொசு விரட்டி, வாசனை திரவியங்கள், மாசுபட்ட சுற்றுச்சூழலால் பிரச்னை ஏற்படலாம். இயற்கை உணர்வுகளான மலம், சிறுநீர், பசி, வாயு பிரிதல், தும்மல், இருமல், கொட்டாவி, வாந்தி, மூச்சு, விந்து, தாகம், துாக்கம், விக்கல், உறக்கம் இவைகளை தொடர்ந்து அடக்கினாலும், 'சைனஸ்' பிரச்னை வரலாம். சித்த மருந்துகள் தாளிசாதி கற்ப சூரணம், கற்பூராதி சூரணம், நீர்க்கோவை மாத்திரை, சிவனார் அமிர்தம், கவுரி சிந்தாமணி பவளம், முத்து சிப்பி, கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர், கற்பூர தைலம், சுக்கு தைலம் போன்ற மருந்துகள், சைனஸ் பிரச்னைக்கு நல்ல பலன் தரக் கூடியவை. இவற்றை சுயமாக பயன்படுத்தக் கூடாது. சித்த மருத்துவர் ஆலோசனை பெற்றுத்தான் எந்த மருந்தையும் பயன்படுத்த வேண்டும். வீட்டு வைத்தியம் கிராம்பு, ஓமம், பச்சைக் கற்பூரம் சம அளவில் எடுத்து துளசிச் சாறு, வெற்றிலைச் சாறு, கற்பூரவல்லி இலைச் சாறு விட்டு நன்றாக அரைத்து, நிழலில் உலர்த்தி, பொடித்து கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கலாம்.தேவையான நேரத்தில், தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம். கற்பூர தைலம் சொட்டு மருந்து வாங்கி, மருத்துவர் ஆலோசனை பெற்று வாசனை பிடிக்கலாம். நீர்க்கோவை மாத்திரையை வெந்நீர் விட்டு குழைத்து, சைனஸ் உள்ள இடத்தில் பற்று போடலாம். டாக்டர் சா.காமராஜ் மாவட்ட முன்னாள் சித்த மருத்துவ அலுவலர், திருச்சி 94898 20113, 0431-2300181 drkaamaraaj@gmail.com