உள்ளூர் செய்திகள்

உணவு குழாயின் பாதுகாப்பு அரண்!

பல நுாற்றாண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் தேங்காய் எண்ணெய், நெய் இவற்றில் உள்ள கொழுப்பு அமிலம் எளிதில் செரிமானம் ஆகக் கூடியது. அதிகமான சூட்டில் சமைத்தாலும் எந்த பிரச்னையும் தராது.இவை இரண்டும் ஜீரண மண்டலத்தில் உள்ள செல்களுக்கு எரிசக்தியாகவும் பயன்படுவதால், நல்ல பாக்டீரியாக்கள், மியூக்கஸ் எனப்படும் பாதுகாப்பு அடுக்கை உணவு குழாயின் உட்புறம் உருவாக்குகிறது. இது கெட்ட பாக்டீரியாவிடம் இருந்து உணவு குழாயை பாதுகாக்கும்.'வைட்டமின் - ஏ, ஈ மற்றும் ஒமேகா - 3'க்கு இணையான சத்துக்களும் இந்த எண்ணெயில் உள்ளன.ஆதாரம்: ஆயுர்வேத மருத்துவ இதழ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !