தோலின் வயதைக் கண்டுபிடிக்க ஒரு டெஸ்ட்
வெளித்தோற்றத்திற்கு முக்கியம், தோல் அழகு. தோல் பளபளப்பாக இருக்க வேண்டும்; சுருக்கங்களே விழக் கூடாது. குறிப்பாக, நம் வயதை தோல் வெளிக்காட்டவே கூடாது என்பது பொதுவான விருப்பம். அதற்காகத்தான் கிரீம்கள், லோஷன்கள் என்று விதவிதமாக வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் எந்த அழகு சாதனப் பொருளும் தோலின் நிஜத்தை மாற்றவே முடியாது என்பதுதான், அறிவியல்பூர்வமான உண்மை.சர்வதேச தோல் ஆராய்ச்சியாளர்கள், தோலின் வயதைத் அறிய, ஒரு பரிசோதனை முறையை வெளியிட்டு உள்ளனர். ஆள்காட்டி விரலையும் பெருவிரலையும் சேர்த்து கையின் மேல்புறம் உள்ள தோலை, 2 விநாடிகளுக்கு இழுத்துப் பிடிக்க வேண்டும். பின் விட்டுவிட்டால், தோல் தன் இயல்பு நிலைக்கு வர ஒன்றிரண்டு விநாடிகள் ஆகிறது என்றால், தோலின் வயது 30 வயதிற்கு கீழ் இருக்கிறது. 3 முதல் 4 விநாடிகள் - 30 முதல் 44 வயது 5 முதல் 9 விநாடிகள் - 45 முதல் 50 வயது10 முதல் 15 விநாடிகள் - 60 வயதிற்கு மேல் 15 விநாடிகளுக்கும் மேல் ஆகிறது என்றால், தோலின் வயது சந்தேகமில்லாமல் 70 வயதிற்கும் அதிகம்.