பஸ்சிம உத்தான ஆசனம்
பொருள்:பஸ்சிமம் - மேற்கு; இங்கு முதுகுப் பகுதி எனப்பொருள். உத்தானம் - நீட்டுவது. உடலின் மத்திய பகுதி நன்கு இழுக்கப்படுவதால், இந்த பெயர்.செய்முறை:தரையில் அமர்ந்து கால்களை நேராக நீட்ட வேண்டும்கைகளை காதோடு சேர்த்து மேலே தூக்க வேண்டும்மூச்சை வெளிவிட்டுக் கொண்டே, முன்புறம் குனிந்து, கால் கட்டை விரலை தொட வேண்டும். அப்போது நெற்றி, முழங்காலில் பட வேண்டும். இரண்டு முழங்கைகளும் தரையில் பட வேண்டும்; கால்களை தூக்க கூடாது.சிரமமான ஆசனமாக இருந்தாலும், செய்யச் செய்ய சுலபமாகும். பலன்கள்:1. ஜீரண உறுப்புகளை பலப்படுத்தி, அவற்றை சீராக இயங்க வைக்கிறது 2. மலச்சிக்கல் நீங்கும்3. மாதவிடாய் பிரச்னை சரியாகும்4. இன்சுலின் சரியாக சுரந்து, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்5. உடல் எடை குறையும்குறிப்பு: முதுகு வலியுள்ளோர், யோகாசன நிபுணர்களின் ஆலோசனையோடு செய்வது நல்லது.- ரா.சுதாகர், திருமூலர் பிரபஞ்ச யோகா மையம், சென்னை. 97909 11053