உள்ளூர் செய்திகள்

குண்டுப் பெண்களால் அவதிப்படும் குழந்தைகள்!

அதிக உடல் பருமன் உடைய பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள், பிறவி கோளாறுடன் பிறக்க வாய்ப்புகள் அதிகம். இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, பிறந்த ஓராண்டில், பிறவியிலேயே வரும் இதயக் கோளாறுகள், அதிகம் பாதிப்பதாக தெரிய வந்துள்ளது. இதுதவிர, கண்கள், ஜீரண மண்டலம், நரம்பு மண்டல பாதிப்புகளும் வருகிறது.பெண் குழந்தைகளை விடவும், ஆண் குழந்தைகளே உடல் பருமன் அதிகம் உள்ள அம்மாவால் பாதிக்கப்படுகின்றனர். உலகம் முழுவதும் எடுத்துக் கொண்டால் 18 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்களில், உடல் பருமன் அதிகம் உள்ளவர்களின் எண்ணிக்கை 2016ம் ஆண்டு புள்ளி விபரத்தின்படி, 70 கோடிக்கும் மேல் அதிகரித்து உள்ளது.அதன் பின் கடந்த ஐந்து ஆண்டுகளில், மூன்றில் ஒருவர், உடல் பருமன் கொண்டவராக இருப்பதால், குண்டு பெண்களின் எண்ணிக்கை பல கோடியாக அதிகரித்து உள்ளது.ஆதாரம்: ஸ்வீடன், மருத்துவ விஞ்ஞானிகளின் ஆய்வு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்