சாதம் சாப்பிடலாம் வாங்க!
குறிப்பிட்ட உணவுப் பழக்கம், உடற்பயிற்சியால் ஒருவரின் உடல் எடை குறைந்தால், மற்றவர்களும் அதையே பின்பற்றுவது இயல்பு; ஆனால், பலன் ஒரே மாதிரியாக கிடைக்கும் என்று சொல்ல முடியாது.ஒவ்வொருவரின் உடல் அமைப்பும், உணவு தேவையும் மாறுபட்டது. இட்லி, சாம்பார், ரசம், சாதம், பொரியல் என்று நம் பாரம்பரிய உணவுகள், சாப்பிடும் முறை மிகச் சிறந்தது. இதைப் பின்பற்றினால், அவசியம் இல்லாமல் எடை அதிகரிக்காது.உலகிலேயே மிகவும் ஒல்லியாக இருக்கும் சீனர்களும், ஜப்பானியர்களும், மூன்று வேளையும் அரிசி உணவு சாப்பிடுகின்றனர். நல்ல கார்போஹைட்ரேட் இருக்கும் அரிசி உணவை சாப்பிடுவது தவறில்லை; எவ்வளவு சாப்பிடுகிறோம், எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம்.- மெட்டபாலிசம்