மேமோகிராம் பரிசோதனையால் கேன்சர் பரவுமா!
எல்லா மார்பகக் கட்டியும் புற்று நோய் கட்டி அல்ல. அப்படி ஆவதற்கான சாத்தியம் மிகக் குறைந்த அளவே உள்ளது. நீண்ட நாட்களாக மார்பகத்தில் கட்டி இருப்பது, மார்பகத்தின் அளவில் அல்லது வேறு ஏதாவது மாற்றங்கள் தெரிந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.ஆண்களுக்கும் மார்பகப் புற்று நோய் பாதிப்பு வரும். இது குறித்த விழிப்புணர்வு மிகக் குறைவு என்பதால், மார்பகப் புற்று நோயால் இறப்புகளும் அதிகம். பொதுவாக, மார்பகக் காம்பின் அடிப்பகுதியில், கடினமான புற்று நோய் கட்டி ஆண்களுக்கு வருகிறது.மேலும், 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், புற்று நோய் பாதிப்பு மரபணுக்கள் உள்ளவர்கள், ஆண்டுக்கு ஒரு முறை 'மேமோகிராம்' பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்தப் பரிசோதனையில் பயன்படுத்தப்படும் மிகக் குறைந்த கதிரியக்கத்தால் பாதிப்பு இல்லை.மேமோகிராம் செய்வதால், கேன்சர் செல்கள் பரவும் என்பதும் தவறான அபிப்ராயம். மார்பகப் புற்று நோய் பாதித்தவரிடம் இருந்து, மற்றவர்களுக்கு பரவக்கூடியது இல்லை.டாக்டர் எஸ்.ராஜாசுந்தரம், புற்று நோய் சிறப்பு மருத்துவர், சென்னை. 98410 14445