உள்ளூர் செய்திகள்

செயற்கை வால்வு பொருத்தினால் கர்ப்பம் தரிக்கலாமா?

48 வயதான எனக்கு சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம் இல்லை. ரத்தத்தில் எல்.டி.எல்., அளவு 200 மி.கி., என்ற அளவில் உள்ளது. நான் இதன் அளவை குறைக்க உணவு கட்டுப்பாடு, நடைப்பயிற்சியை கடைபிடித்தால் போதுமா?

ஆர்.பத்மா, சென்னை:

உங்கள் வயதில் எல்.டி.எல்., என்னும் கெட்ட கொழுப்பின் அளவு 200 மி.கி., என்பது மிகவும் அபாயகரமான அளவு. தற்போதுள்ள நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற கொடூர நோய்களை தடுக்க எல்.டி.எல்., 100 மி.கி.,க்கு கீழ் இருந்தாக வேண்டும். எல்.டி.எல்., அளவை குறைக்க வாழ்க்கை முறை மாற்றம், உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மிகவும் அவசியம் என்பது அசைக்க முடியாத உண்மை. ஆனால் உங்களுக்கு இருக்கும் எல்.டி.எல்., அளவுக்கு இவை மட்டும் போதுமானதல்ல. அவசியம் நீங்கள் மருந்து எடுத்தாக வேண்டும். உங்களுக்கு குtச்tடிண வகை மாத்திரைகள் சிறந்ததாக இருக்கும். இதை தொடர்ந்து உங்கள் வாழ்நாள் முழுக்க எடுத்தாக வேண்டும். இதை எடுக்கும் போது, உங்கள் ரத்தத்தில் அவ்வப்போது கொழுப்பின் அளவையும், கு.எ.O.கூ., மற்றும் கு.எ.க.கூ., என்ற என்சைம்களின் அளவையும் பார்த்து கொள்வது நல்லது.

Acute Coronary Syndrome என்றால் என்ன?

ஜெரால்டு, வக்கம்பட்டி:

இருதயத்திற்கு ரத்த ஓட்டம் மூன்று ரத்தக்குழாய்கள் வழியாக செல்கிறது. இந்த ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால் அதற்கு, 'Atherosclerosis' என்று பெயர். இதில் அடைப்பின் தீவிரம் எந்தளவு உள்ளது என்பதை பொறுத்து, இருதய தசைக்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. திடீரென நெஞ்சவலி ஏற்பட்டு இ.சி.ஜி.,யில் மாற்றங்கள் ஏற்படும் போது அது, அக்யூட் கொரனரி சிண்ட்ரோம் எனப்படுகிறது. இதில் ரத்தக்குழாயில் இருக்கும் அடைப்புகளுடன், ரத்தக்கட்டியும் அங்கமாக திகழ்கிறது. இதை 1) Unstable Angina 2) NonSTEMI 3) STEMI என மூன்றாக பிரிக்கலாம். இது அடைப்பின் தீவிரத்தை பொறுத்தது. இந்த மூன்றில் எதுவாக இருந்தாலும், ஒரு இருதய டாக்டரிடம் சென்று, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, சிகிச்சையை உடனடியாக அளிக்க வேண்டும். இத்துடன் அவசியம் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டு, அடைப்புக்கு ஏற்ப சிகிச்சை முறை அமையும்.

இருதயத்தில் செயற்கை வால்வு பொருத்திய பெண்கள் கர்ப்பம் தரிக்கலாமா?

கே.செல்வி, திண்டுக்கல்:

இருதயத்தில் பொருத்தப்படும் செயற்கை வால்வுகள் இரு வகையாக உள்ளன.1) Bio Prosthesis 2) Mechanical Prosthesis. இதில் மெக்கானிக்கல் புராஸ்தசிஸ் வால்வு பொருத்தியவர்கள் அவசியம் ரத்தம் உறையாதிருக்க தரப்படும் Warf அல்லது Acitrom போன்ற மாத்திரையை வாழ்நாள் முழுவதும் எடுப்பது அவசியம். ஏனெனில் இம்மாத்திரையை நிறுத்தினால் செயற்கை வால்வில் ரத்தக்கட்டி ஏற்பட்டு மரணம் ஏற்படும் அளவு பாதிக்க வாய்ப்புள்ளது. ஆனால் Bio Prosthesis வால்வு பொருத்தியவர்கள் இந்த மாத்திரையை எடுக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இந்த செயற்கை வால்வில் ரத்தக்கட்டிகள் ஏற்படாது. பயோ புராஸ்தசிஸ் வால்வு பொருத்திய பெண்கள், கர்ப்பமாவதில் எவ்வித சிரமமும் இல்லை.

ஆனால் Acitrom அல்லது Warf மாத்திரையை எடுத்து கொண்டு இருக்கும் மெக்கானிக்கல் வால்வு பொருத்திய பெண்கள், கருத்தரிக்க சில முக்கிய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் இந்த மாத்திரையால் கருவுக்கு பாதிப்பு ஏற்படும் தன்மை உள்ளது. கர்ப்பமான முதல் மூன்று மாதங்களுக்கு இம்மாத்திரையை நிறுத்திவிட்டு ஹெப்பாரின் ஊசியை போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு மீண்டும் அசிட்ரோம் அல்லது வார்ப் மாத்திரையை எடுத்து கொள்ள வேண்டும். 36 வாரங்கள் முடிந்தபின், இந்த மாத்திரைகளை மீண்டும் நிறுத்திவிட்டு, மீண்டும் ஹெப்பாரின் ஊசியை எடுத்து கொள்ள வேண்டும். பிறகு பிரசவம் ஆகலாம். பிரசவம் முடிந்தபின், மீண்டும் அசிட்ரோம் அல்லது வார்ப் மாத்திரையை எடுக்க வேண்டும்.

- டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !