உள்ளூர் செய்திகள்

பொறுப்பான நடத்தையே வைரசை கட்டுப்படுத்தும்!

படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி, ஆக்சிஜன் உற்பத்தியை பல மடங்காக, அவசர சிகிச்சை பிரிவை மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைப்பதால் மட்டும், எந்த நாடும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தி விட முடியாது. இவை தற்காலிக, அதிக செலவை ஏற்படுத்தும் வழிகள் மட்டுமே!சுகாதாரத் துறை வலிமையாக, எல்லாவற்றுக்கும் தயாராக, அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் இருந்தால், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்றால், அடிப்படை மருத்துவ கட்டமைப்பு வலிமையாக இருக்கும், மேற்கத்திய நாடுகளில் ஏன் வைரசை கட்டுப்படுத்த முடியவில்லை; இறப்பு எண்ணிக்கையும் ஏன் குறையவில்லை?நிலைத்து நிற்கும் நீண்ட நாட்களுக்கு பலனை தரும் விஷயங்கள் மிக எளிமையானவை; அனைவரும் எளிதாக பின்பற்றக் கூடியவை. அவை...சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, முறையாக முக கவசம் அணிவது, எந்தவித சமரசமும் செய்யாமல், சுய சுகாதாரத்தை கடைப்பிடித்தல், சுற்றுப்புறத்தை சுத்தமாக பராமரிப்பது.நாம் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டியது, விபத்துகளை தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அல்ல மருத்துவமனைகள். சாலை விதிகளை பின்பற்றி, கவனமாக வாகனங்களை ஓட்டினால் தான் விபத்துகளை தவிர்க்க முடியும்.நாம் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே, கொரோனா கட்டுக்குள் வரும். நம் பொறுப்பான நடத்தை மட்டுமே, அனைத்தையும் மாற்றும் வல்லமை கொண்டது.டாக்டர் உமா வைத்தியநாதன்,மகப்பேறு மருத்துவர்,புதுடில்லி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !