உடற்பயிற்சி செய்தால் சர்க்கரை அளவு குறையுமா?
எனது வயது 39. சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு எதுவும் இல்லை. நான் உடற்பயிற்சி செய்தால், சர்க்கரை அளவும், ரத்த அழுத்தத்தின் அளவும் வெகுவாக குறைந்துவிட வாய்ப்புள்ளது அல்லவா? கே.நாகராஜன், கோவை:
உடற்பயிற்சி என்பது நம் உடலுக்கு இன்றியமையாதது. தினமும் உடற்பயிற்சி செய்தால் தான், நாம் உண்ணும் உணவு செரிப்பதுடன், உணவின் சத்துக்களும் பயன்பாட்டுக்கு வரும். எனவே தினமும் இல்லாவிட்டாலும், வாரத்தில் ஐந்து நாட்களாவது உடற்பயிற்சி செய்வது மிக முக்கியம். ரத்தக்கொதிப்பும், சர்க்கரை நோயும் இல்லாதவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்வதால், இந்நோய்கள் வராமலேயே தடுக்க இயலும். இத்துடன் சரியான உணவு பழக்கமும் மிக அவசியம்.
'Candesartan' என்ற மருந்தை நான் பல ஆண்டுகளாக எடுத்து வருகிறேன். தற்போது இம்மருந்து கிடைப்பதில்லை. இதற்கு மாற்று மருந்து உள்ளதா? .செல்வநாதன், மதுரை:
'இச்ணஞீஞுண்ச்ணூtச்ண' என்பது அ கீ ஆ என்ற மருந்து வகையை சேர்ந்தது. இது ரத்தக்கொதிப்பை நன்கு கட்டுப்பாட்டில் வைக்கிறது. அதுமட்டுமின்றி ஹார்ட் பெயிலியருக்கு இம்மருந்து நல்லது. இருதய பம்பிங் திறனையும் கூட்டுகிறது. இம்மருந்து கிடைக்கவில்லை என்றால், இதற்கு பதில் வேறு ஒரு அ கீ ஆ மருந்தை உங்கள் இருதய நோய் நிபுணரின் ஆலோசனையை பெற்று எடுத்து கொள்வது நல்லது.
எனக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன் சர்க்கரை நோய் இருந்தது. மருந்து எடுத்து வருகிறேன். இரண்டு ஆண்டுக்கு முன் மாரடைப்பு வந்தது. அதற்கும் மருந்து எடுத்து வருகிறேன். ஆனால், தற்போது டாக்டர் சர்க்கரை நோய்க்கு மாத்திரை தேவை இல்லை என்கிறார். சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து சோதித்ததில், எனது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 100 மி.கி., என வந்துள்ளது. இது சரியா? ராமசாமி, அருப்புக்கோட்டை:
உங்களுக்கு சர்க்கரை நோய் ஆறு ஆண்டாக உள்ளது. உங்கள் உணவு கட்டுப்பாட்டாலும், நடை பயிற்சியாலும் அதை நன்கு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து ரத்தத்தில் சர்க்கரை அளவு 100 மி.கி., என உள்ளது மிகவும் குறைவு தான். இதற்கு சர்க்கரை நோய்க்கான மாத்திரை எதுவும் தேவையில்லை. இருந்தாலும், மாதம் ஒரு முறை நீங்கள் உங்கள் சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும். நாளடைவில் இது அதிகரித்தால் சர்க்கரை நோய்க்கு மாத்திரை தேவை. இருதய நோய்க்கான மாத்திரையை வாழ்நாள் முழுவதும் எடுத்தாக வேண்டும்.
நான் ஈஐஃஙூஉM மற்றும் இஃOகஐகூஅஆ மாத்திரைகளை டாக்டரின் அறிவுரைப்படி நான்கு ஆண்டுகளாக எடுத்து வருகிறேன். இம்மாத்திரைகளின் பலன் என்னவென்று தெரிந்து கொள்ளலாமா? ராஜா, திருப்பூர்:
ஈஐஃகூஐஅஙூஉM என்ற மாத்திரை இருதயத்தின் ரத்த நாளங்களில் உள்ள ரத்த ஓட்டத்தை சரிசெய்ய தரப்படுகிறது. இஃOஐகூஅஆ என்ற மாத்திரை இருதய ரத்தநாளங்களில் ரத்தக்கட்டிகள் ஏற்படாமல் தவிர்க்க தரப்படும் மாத்திரை. இந்த இரண்டு மாத்திரைகளும் இருதய ரத்தநாள அடைப்புகளுக்காக தரப்படும் மாத்திரைகளே. உங்களுக்கு ரத்த நாளத்தில் அடைப்பு இருக்கிறது என்றால் இதனுடன் சேர்த்து குtச்tடிண வகை மாத்திரையை எடுப்பதும் அவசியம்.
- டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை.