"டி.பி., நோய் தழும்பு இருந்தால் விசா மறுப்பா?
டி.பி., கிருமியால், நம் நுரையீரல் தாக்கப்படும் போது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, டி.பி.,யை எதிர்க்கும் போது, நுரையீரலில் தழும்பு ஏற்படுவது இயல்பு. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள நபருக்கு, இதனால் தழும்பு கண்டிப்பாக ஏற்படும்* என் தந்தை வயது, 60. தினமும், 10 முதல், 15 சிகரெட்டுகள் புகைப்பார். ஆறு மாதங்களாக இருமல் இருந்தது. மருத்துவ பரிசோதனையில், அவரது வலது நுரையீரலின் கீழ்ப்பகுதியில், கேன்சர் கட்டி இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்ற முடியுமா?ராமநாதன், கோவைநுரையீரல் கேன்சரில், நான்கு (1, 2, 3ஏ, 3பி, 4) நிலைகள் உள்ளன. இதில், மூன்றாம் நிலை வரை, அறுவை சிகிச்சை பலனளிக்கும்; மூன்றாம் நிலை, 'பி' மற்றும் நான்காம் நிலைகளில், அறுவை சிகிச்சை பலனளிக்காது. அவர்களுக்கு, 'ரேடியோதெரபி' மற்றும் 'ஹீமோதெரபி' கொடுக்க வேண்டும்.உங்கள் தந்தைக்கு, கேன்சர் கட்டியின் தீவிர தன்மை, எந்த நிலையில் உள்ளது என, கண்டறியுங்கள். மூன்றாம் நிலை, 'ஏ'க்குள் இருந்தால், கேன்சர் கட்டி மற்ற உறுப்புகளுக்கு பரவாமல் இருக்கிறதா என, கண்டறியுங்கள். இதற்கு, 'பெட் ஸ்கேன்' என்ற நவீன பரிசோதனைகள் உள்ளன. நுரையீரல் கேன்சர் வேறு உறுப்புகளுக்கு பரவாத நிலையில், அறுவை சிகிச்சை நல்ல பலனளிக்கும்.* எனக்கு, ஐ.எல்.டி., என்னும், நுரையீரல் நோய் உள்ளது. மேலும் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு, 80 சதவீதமாக இருப்பதால், 'ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்' என்ற கருவியை பயன்படுத்துவது நல்லது என, டாக்டர் பரிந்துரைத்தார். அப்படி என்றால் என்ன?செல்வன், திருச்சிநம் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, 98 சதவீதமாக இருக்க வேண்டும். இதன் அளவு, 85 சதவீதமாக குறையும் போது, நம் உடலின் முக்கிய உறுப்புகளான மூளை, இதயம், நுரையீரல் அதன் கட்டுப்பாட்டை இழந்து விடும். ஆகையால், 80 சதவீதம் ஆக குறைந்து இருக்கும் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க, செயற்கையாக, ஆக்சிஜனை உட்செலுத்த வேண்டும். முன்னர், ஆக்சிஜன் சிலிண்டர்கள் இதற்கு பயன்படுத்தப்பட்டன. ஆனால், அவற்றை திரும்பத் திரும்ப மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். ஆகையால், தற்போது ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர் கருவி பயன்படுத்தப்படுகிறது. இக்கருவி, காற்றில் உள்ள ஆக்சிஜனை பிரித்து எடுத்து, நுரையீரலுக்குள் செலுத்துகிறது. இதனால், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க முடியும். எனவே, இந்தக் கருவியை உயிர் காக்கும் கருவி என்றே கூறலாம்.* என் நண்பர், வெளிநாடு செல்ல விண்ணப்பித்தார். மருத்துவ பரிசோதனையின் போது, அவருக்கு டி.பி., நோய் இருப்பதாகக் கூறி, விசா மறுக்கப்பட்டது. என் நண்பரோ, 10 ஆண்டுகளுக்கு முன், டி.பி.,நோய்க்கு ஆறு மாதங்களாக மருந்து எடுத்தார். முற்றிலும் குணமடைந்ததாக டாக்டர்கள் கூறினர். பின், எதற்காக இப்போது விசா மறுக்கப்படுகிறது?இஸ்மாயில், விருதுநகர்உங்கள் நண்பர் தொடர்ந்து, ஆறு மாதங்களாக டி.பி., மருந்தை தொடர்ந்து எடுத்ததால், டி.பி., முற்றிலுமாக குணமடைந்திருக்கும். ஆனால், அந்நோயால் ஏற்பட்ட தழும்பு மறையாது. பத்தாண்டுகளுக்கு பிறகும், நுரையீரல் எக்ஸ்-ரேயில் அத்தழும்பு காணப்படலாம். வெளிநாடு செல்கையில் எடுக்கப்படும் மருத்துவ பரிசோதனையின் போது, அந்தத் தழும்பை சில டாக்டர்கள் டி.பி., நோயாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், விசா அளிக்க மறுக்கின்றனர்.டி.பி., கிருமியால், நம் நுரையீரல் தாக்கப்படும் போது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, டி.பி.,யை எதிர்க்கும் போது, நுரையீரலில் தழும்பு ஏற்படுவது இயல்பு. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள நபருக்கு, இதனால் தழும்பு கண்டிப்பாக ஏற்படும். இதற்கு சிகிச்சை தேவையில்லை.டாக்டர் எம்.பழனியப்பன்,மதுரை, 94425 24147