உள்ளூர் செய்திகள்

மூளை ஆரோக்கியத்துக்கு தினமும் கிரீன் டீ குடிங்க!

நமது மூளை குறித்த ஆராய்ச்சிகள், இன்னும் தொடர்ந்து நடந்து வருகின்றன. உடலின் ஒவ்வொரு அசைவையும், நிர்வகிக்கும் இந்த தலைமை செயலகம் மிகவும் புதிரானது. உணவு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட காரணங்களால், இதன் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம். அப்போது நாம் உட்கொள்ளும் சில வகை உணவுகளே கைகொடுக்கின்றன. சுற்றுச்சூழல் காற்று மாசு மூலமாகவோ, விஷச்சத்துக்களாலோ, மிக அதிகமான கொழுப்புச் சத்துள்ள உணவுகள் மூலமாகவோ ஏற்படும், கெடுதியிலிருந்து, கிரீன் டீ நம்மை பாதுகாக்கிறது. நம் மூளைக்குத் தேவையான டோப்பாமைன் என்ற சத்து, கிரீன் டீயில் அதிகம் உள்ளது. இந்த டோப்போமைன் தான், மூளையின் மகிழ்ச்சியைத் தூண்டும் நரம்பு இயக்கிடும் நிலையம். வாழ்க்கையின் பல முக்கிய கிரியா ஊக்கி மையமாகவே, இந்த சக்தி செயல்படுகிறது. கிரீன் டீயில் உள்ள அமினோ ஆசிட் என்ற சத்தும், மூளை பழுதானவர்களை மீண்டும் செயல்பட உதவிடும் ஒரு துணைவன் ஆக செயல்படுகிறது. தீவிர கவனம், சக்தி, குறைந்த கவலை - இவற்றை இந்த அமினோ ஆசிட் பார்த்துக் கொள்கிறது. ஸ்வீட் பொட்டாட்டோ: இந்த இனிப்பு கிழங்கு, நமது ரத்தத்தில் உடனடியாக, சர்க்கரை அளவை கூட்டி விடாது. இதன் மூலம் நமது சக்தியை குறையாமலும், கவனம் சிதறாமலும் வைக்க நாள் முழுவதும் உதவுகிறது. பீட்டா கரோட்டின் என்ற சத்துதான், மூளையைக் கூர்மை மழுங்காமல் காக்கும் சத்து. இனிப்பு உருளைக்கிழங்குகளை, வாரத்துக்கு, 2 அல்லது, 3 முறை சாப்பிடுங்கள். ஓட் மீல் என்ற ஓட்ஸ் கப் சாப்பாடு மலச்சிக்கலைப் போக்கும். ஒரு உருளைக் கிழங்கு அதனைச் செய்து விடுகிறதாம். இந்த நார்ச்சத்து உணவு, நமது கொழுப்புச் சத்தைக் குறைத்து, மூளையைச் சுறுசுறுப்பாக்க உதவுகிறது.மஞ்சள்: இதன் பளிச்சென்ற மஞ்சள் நிறம், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அளவு கூடுதலாக இருப்பதைக் காட்டுகிறது. இதில் உள்ள கிரியேட்டிவ் புரோட்டீன் என்ற புரதச் சத்து, மூளையை சில நேரங்களில் எரிச்சலுக்கு ஆளாக்கி, அதன் சில பகுதிகள் கெடுவதை தடுக்கிறது. சமைக்கும் உணவில் இந்த மஞ்சளை சேர்த்து உண்ணும், 1000 முதியவர்களை வைத்து செய்யப்பட்ட ஆராய்ச்சியில், அவர்களின் மூளையின் செயல்திறன் கூடுதலாகியுள்ளது தெரியவந்துள்ளது. பொதுவாக வாசனை உணவுப் பொருள்கள் எல்லாமே, உணவில் இப்படி பயன்படுகின்றன.இஞ்சி, லவங்கப்பட்டை போன்றவை, மூளை பாதுகாப்பு அரண்களாக இருந்து காக்கின்றன. உங்களது தினசரி உணவில், இவற்றை ஒரு கால் கரண்டி சேர்த்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !