உள்ளூர் செய்திகள்

"மாத்திரை சாப்பிட்டும் வலி குறையவில்லையே

வெங்கட் பிரபு, சேலம்: எனக்கு சில மாதங்களாக பல் வலி உள்ளது. மாத்திரை சாப்பிட்டதும் மறைந்துவிடுகிறது. சில நாட்களில், மீண்டும் வருகிறது. வலி குறைய வேறு மாத்திரை ஏதாவது உள்ளதா?பல் வலிக்கு முக்கிய காரணங்கள், பல்சொத்தை மற்றும் ஈறு நோய்கள். வலியை குறைக்கும் மாத்திரைகள், தற்காலிக நிவாரணமே கொடுக்கும். வலிக்கு காரணமான சொத்தை அல்லது ஈறு நோயை சரி செய்து, அதற்கு காரணமான கிருமிகளை நீக்கும் வரை, வலி போகாது. வலி மாத்திரைகளை, அடிக்கடி சாப்பிடுவதால், வயிறு மற்றும் குடலில் புண் ஏற்படும்.தகுந்த சிகிச்சை செய்யாமல், வெறும் மாத்திரை மட்டும் சாப்பிட்டால், பின்னாளில், வலி அதிகமாகி, வீக்கம் மற்றும் சீழ் உண்டாகும். எனவே, சிகிச்சை செய்து கொண்டால் தான், பல் வலி நிரந்தரமாக குணமாகும்.பலராமன், கோவை: என் பின் பற்கள் ஒன்றில், வேர் சிகிச்சை செய்து, 'கேப்' போடப்பட்டுள்ளது. அந்த பல்லில், தற்போது வலி உள்ளது. கடிக்கும்போது வலி அதிகமாகிறது. அப்பல்லை சுற்றியுள்ள ஈறுகளில், வீக்கமும் உள்ளது. இதற்கு, நான் என்ன செய்ய வேண்டும்?வேர் சிகிச்சை செய்த பல்லில், வலி வருவதற்கு சில காரணங்கள் உள்ளன. பிரதான வேரின் சில சிறிய பிரிவுகளை, சுத்தம் செய்யாமல் விடுவது; வேரின் வளைவுகளில், கிருமிகள் தங்கிவிடுவது அல்லது உடலில் உள்ள மற்ற நோய்களால் வேரில் உள்ள சொத்தை ஆறாமல் இருப்பது; வேர்களில் ஏற்படும் சிறிய விரிசல்கள் போன்றவை, இதில் முக்கியமானவை.இதுபோன்ற சமயங்களில், வேரின் நுனியில், வலி மற்றும் வீக்கம் ஏற்படும். அப்போது, முதலில் வேர் சிகிச்சை செய்யலாம். வேரினுள் சென்று மற்றொரு முறை சுத்தம் செய்து அடைக்கலாம். இதற்கு பிறகும் வலி இருந்தால், 'ஏப்பி செக்டமி' என்றொரு சிகிச்சை செய்யலாம். இதில், வேரின் நுனியில், 3-4 மி.மீ., மட்டும் அகற்றி விட வேண்டும். இதனால், வேரில் உள்ள கிருமிகள் அகற்றப்பட்டு வலி மற்றும் வீக்கமும் குணமடையும்.டாக்டர் ஜெ.கண்ணபெருமான்,94441 54551


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்