உள்ளூர் செய்திகள்

அணுகுண்டை விடவும் அபாயம்!

'இன்டர்நெட் கேமிங் டிசாடர்' எனப்படும் இணையதள விளையாட்டுகள், சமீபகாலமாக மருத்துவ உலகத்தின் மிகப்பெரிய சவாலாக உள்ளது. 'ஆன்லைன்' விளையாட்டு, சமூக வலைதளங்களில் அதிக ஈடுபாடு என்று ஆரம்பித்து, அவற்றிற்கு அடிமையாகி, மன அழுத்தம், தற்கொலை எண்ணம், உடல்நல கோளாறுகள், படிப்பில் கவனம் இன்மை, வேறு எந்த விஷயத்திலும் ஆர்வம் இல்லாமல் போவது, உடல் பருமன் என, பல பிரச்னைகளால் குழந்தைகள் அவதிப்படுவது அதிகரித்து வருகிறது.இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்களில் சிலர், எந்த உடல் அசைவும் இல்லாமல், சிலை போல இருப்பதும் உண்டு. இவர்களுக்கு சிகிச்சை தருவது, போதைக்கு அடிமையானவர்களை மீட்பதை காட்டிலும் சவாலானது.வாரத்தில், 29 மணி நேரம் இணையதளத்தில் விளையாடிய குழந்தைக்கு வேறு எதிலும் கவனம் இருக்காது.இணையதளம் என்பது, அணு ஆற்றல் போன்றது... முறையாக பயன்படுத்த குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தால், பல நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும்; அப்படி இல்லாவிட்டால், அணுகுண்டை போல ஆபத்தாக முடியலாம்.-ஜர்னல் ஆப் பீடியாட்ரிஷியன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !