கொழுப்பு... - கொஞ்சம் தேவை தான்
நாம் பிறக்கும்போது, நமது மூளை, 60 சதவீதம் கொழுப்பு நிறைந்து இருக்கும். அதுவும், 'ஒமேகா - 3' என்ற கொழுப்பு அமிலத்தால் ஆனதாக இருக்கும். இது இருந்தால் தான் நமது மூளை ஞாபக சக்தியுடன் திகழும். மன அழுத்தம் ஏற்படாது.குறிப்பாக, மறதி நோயான 'அல்ஜிமெர்ஸ்' என்பது வராது. உடல் பருமனை உருவாக்கும் கொழுப்பு வேறு. மீன், முட்டையிலிருந்து கிடைக்கும் நல்ல கொழுப்பு மூளைக்கும், இதயத்திற்கும் நன்மை செய்கின்றன. சைவ உணவுக்காரர்கள் முருங்கைக் கீரை, பச்சைப் பட்டாணி, வல்லாரைக்கீரை, வள்ளிக்கிழங்கு மூலம், இதே அளவு ஞாபக சக்தியையும், மூளைத் திறனையும் பெறலாம். மன அழுத்தத்தை கேரட் ஒன்றே குணப்படுத்தி விடும். தேவையான மன உறுதியையும், சிந்திக்கும் திறனையும் பாதாம் பருப்பு தரும்.