உள்ளூர் செய்திகள்

தூக்கமின்மை

தூக்கமின்மை, ஒருவரின் அறிவாற்றல் திறன்களான ஞாபக சக்தி, செயலில் கவனம் போன்றவற்றை மெதுவாக அழிக்கும். இதனால் தான், சிலர் எந்த பொருளை எங்கு வைத்தோம் என்று தெரியாமல், அடிக்கடி தேடிக் கொண்டிருக்கிறோம்.விபத்து கணக்கெடுப்பு தகவல்கள், பெரும்பாலான சாலையோர விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக, தூக்கமின்மையையே சொல்கின்றன. எனவே வாகன ஓட்டிகள், தினமும் நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். தூக்கமின்மை இருந்தால், அது பாலியல் வாழ்க்கையை பாதித்து, தம்பதிகளுக்கிடையே பெரிய விரிசலை ஏற்படுத்தும்.நாள்பட்ட தூக்கமின்மை, இதய நோய் வருவதற்கு வழிவகுக்கும். ஏனெனில், இந்த பிரச்னையால், இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, அதன் மூலம் மாரடைப்பில் இருந்து தமனி தடிப்பு வரை, எந்த இதய நோயும் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தூக்கமின்மையால், சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும். மேலும் தூங்கும் நிலை கூட, சரும சுருக்கங்களை உண்டாக்கும்.மன இறுக்கத்திற்கும், தூக்கமின்மைக்கும் தொடர்பு இருப்பதாக உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர். அதிலும் மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்வோர் தான், அதிக அளவில் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். அதனால் தான் அவர்கள் மன இறுக்கத்தினால், தூக்கமின்மை ஏற்பட்டு, நாளடைவில் தற்கொலைக்கு தூண்டப்படுகின்றனர். ஒருநாளைக்கு, கட்டாயமாக, எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் அல்லது குறைந்தது ஆறு மணி நேரமாவது தூங்க வேண்டும். ஒருவர் சரியான நேரத்தில் தூங்கினால், உடல் உறுப்புகள் சரியாக செயல்படும். தெ. தமிழ் அரசன், பொது மருத்துவர்,சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !