முழுஉடல் பரிசோதனை
பி.ரத்னகுமார், திருப்பரங்குன்றம்: என், 24 வயது மகன், கம்ப்யூட்டரே கதியென, அமர்ந்திருக்கிறான். எவ்வித உடற்பயிற்சியும் இல்லை. உடலும் பருமனாக உள்ளது. இதனால் ஏதாவது பாதிப்பு வருமா?கம்ப்யூட்டர் துறையில் உள்ள பலருக்கு, நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன் செலவிடும் கட்டாயம் உள்ளது. இதனால், உடற்பயிற்சியின்மை உள்ளது. இதனால், 30 வயதுக்குள் உயர்ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வரும் தன்மையும் பலமடங்கு கூடுகிறது. இதன் காரணமாக, ரத்தக்குழாய் நோய்களான மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.