கண்களில் கருவளையம் நீங்க..
# வெள்ளரிச் சாறும், பன்னீரும் சம அளவில் கலந்து, கண்களைச்சுற்றிலும் தடவி, மசாஜ் செய்யலாம்#துாங்கப் போகும் முன், கண்களின் கீழ் ஆலிவ் எண்ணெய் தடவலாம்#வெண்ணெயுடன் கொத்தமல்லிச் சாறு கலந்து கண்களுக்கு பேக் போடலாம்#சந்தனம் மற்றும் ஜாதிக்காயை இழைத்து, கண்களை சுற்றிலும் பூசலாம்#தேனில் திருநீறைக் குழைத்து, கருவளையத்தின் மீது தடவி, 10 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவலாம்#தோல் நீக்கிய தக்காளி விழுது, விதை நீக்கிய கறுப்பு திராட்சை விழுது இவற்றை கண்களின் மீது பூசலாம்#ஊற வைத்த பாதாமை பாலுடன் சேர்த்து மை போல அரைத்து, கண்களைச் சுற்றிலும் பேக் போடலாம்#பப்பாளியின் சதைப் பகுதியை பாலாடையுடன் சேர்த்து மசித்து, முகம், கழுத்துப் பகுதியில் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம். ஆனி ஜான், அழகுக்கலை நிபுணர், துாத்துக்குடி