ஹெல்த் கார்னர் - ஜீரணக் கோளாறு
கோடைக்காலத்தில் பொதுவாக அனைவருக்கும் வரும் பிரச்னை, ஜீரணக் கோளாறு. அதிலிருந்து நிவாரணம் பெற...* ஒரு லிட்டர் நீரில், 25 கிராம் சுக்கு சேர்த்து, காய்ச்சி அடிக்கடி குடிக்க வேண்டும்.* கறிவேப்பிலை, சுக்கு, மிளகு, சீரகம் இவை அனைத்தையும் பொடி செய்து, சம அளவில் எடுத்து காலை, மாலை என, இரண்டு வேளையும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டால், ஜீரணக் கோளாறு சரியாகும்.* இரண்டு டீஸ்பூன் தனியா, அதே அளவு சுக்குப் பொடி எடுத்து, 200 மி.லி., நீரில் கொதிக்க வைக்க வேண்டும். நன்றாகக் கொதித்து கால் பங்காக வற்றியபின், அதில், 30 மி.லி., எடுத்து சாப்பாட்டுக்கு முன், இரண்டு வேளை குடிக்க அஜீரணம் சரியாகும்.டாக்டர் பார்த்தசாரதிஎஸ்.டி.ஜே.ஆயுர்வேதாலயா