உள்ளூர் செய்திகள்

கண் பராமரிப்பு இதோ டிப்ஸ்

உடல் உறுப்புகளில் மிக சிறந்த அங்கமாக விளங்குவது கண்கள். உலகின் பேரழகை உள்ளத்தில் வைத்து ரசிக்க, கண்கள் இருந்தால் மட்டுமே முடியும். உள்ளத்தின் உணர்வுகள், நவரசங்களை விழிகள் வழியாக வெளிப்படுத்த முடியும். அதனால் கண்கள் நம் உடலில் பராமரிக்க வேண்டிய உறுப்புகளில் முதன்மையானதாக விளங்குகிறது. கண்களில் சிறு பிரச்னை என்றால் கூட, உடனே கவனிக்க வேண்டும். இந்த கண்களை பாதுகாத்து, பராமரிக்க வேண்டியது நம் நல்வாழ்வுக்கு மிக முக்கியம். கண்கள் புத்துணர்வோடு இருந்தால்தான், நாமும் நாள் முழுவதும் புத்துணர்வோடு இருக்க முடியும்.உங்கள் கண்களை பராமரிக்க சில எளிய வழிமுறைகள்: கண்களை பாதிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது சரியான தூக்கமின்மை. தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்குவது மிகவும் முக்கியம். கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, கண்களுக்கு நல்லது. பால் உணவுகள், கீரை, முட்டை, மஞ்சள், ஆரஞ்சு பழங்கள் மற்றும் காய்கள், கண்களின் அழகை பராமரிக்கும் முக்கிய பொருட்கள். போதிய அளவு தண்ணீர் அருந்த வேண்டும். இது கண்களுக்கு புத்துணர்வை அளிக்கும். மீன்கள் கண்களுக்கு தேவையான சத்துக்களை வழங்குகிறது. இதனால் கண் பார்வை குறைபாடுகள் சரியாகும். எனவே தினமும் உணவில், மீன் சேர்ப்பது நல்லது. கண்களில் தூசு விழுந்தால், கண்களை கசக்கக் கூடாது; தூய்மையான குளிர்ந்த நீரால் கண்களை கழுவ வேண்டும். கண்களில் எண்ணெய் விடுவது முதலிய செயல்களை செய்யக் கூடாது. கண்களில் பிரச்னை என்றால், உடனே கண் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்