உள்ளூர் செய்திகள்

ஒரு கப் காபி குடிச்சிட்டு தெம்பா வர்றேன்...!

வேலை பளுவாக இருந்தாலும் சரி, என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தாலும் சரி, ஒரு கப் காபி குடித்தால் சற்று தெம்பாக இருக்கும்' என்று தோன்றும். இப்படியே ஒரு நாளில் பல கப் காபி குடிப்பது நமக்கு வழக்கம்.உண்மையில் காபி புத்துணர்வு தருமா?காபி குடித்த நொடியில் ஒரு புத்துணர்வை உணர்வோம்; ஆனால், அது நிஜ உணர்வு இல்லை. அட்ரினலின் சுரப்பியை துாண்டி, தற்காலிக சக்தியை கொடுக்கும். காபியில் இருக்கும் 'காபின்' என்ற வேதிப்பொருள், நாளடைவில் சோர்வு, நினைவாற்றல் இழப்பு, மனப்பதற்றம் போன்ற பல பிரச்னைகளை ஏற்படுத்தும்.காபி குடிப்பதால் நமக்கு கிடைக்கும் போலியான புத்துணர்வு, ஒரு நாளைக்கு, 30 நிமிடங்கள் சுறுசுறுப்பாக நடப்பதால், நிஜமாகவே உடலுக்கு கிடைக்கும். அதிகபட்சம், ஒரு நாளைக்கு 3 கப் காபி குடிக்கலாம்.- தி நேச்சர் சயின்டிஸ்ட்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !