சிக்கனும், சிறுநீர் பாதை தொற்றும்!
கணேஷ், மருதமலை: சிக்கன் சாப்பிட்டால், சிறுநீரகத் தொற்று ஏற்படுமா?சிறுநீரகத் தொற்றுக்கான காரணம், சிறு குடலிலிருந்து பாக்டீரியா, சிறுநீர்ப் பாதையை அடைந்து, அதில் பாதிப்பு உண்டாக்குவதே. எனவே, சரியாகப் பதப்படுத்தப்படாத, முழுதும் வேக வைக்கப்படாத உணவு வகைகளைச் சாப்பிடும்போது, அவற்றில் உள்ள பாக்டீரியா, சிறுநீர்ப் பாதையில் தொற்றை ஏற்படுத்தி விடும்.