உள்ளூர் செய்திகள்

தும்மினால் தொற்றுமா கொரோனா

சீனாவை தாக்கியுள்ள 'கொரோனா' வைரஸ் அண்டை நாடுகளுக்கு பரவும் அபாயம் உள்ளது. இந்தியாவில் விமான நிலையங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.'கொரோனா வைரஸ்' குடும்பத்தில் இருந்து, உருவாகியுள்ள வைரஸ்தான் 'என்.சி.ஓ.வி.,-2019'. மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் தொகுப்பில் இது ஏழாவது வைரஸ்.ஏற்கெனவே சீனாவில் 2002ல் கொரோனா வைரஸ் குடும்பத்தில் இருந்து 'சார்ஸ்' வைரஸ் தாக்கியதில் 800 பேர் பலியாகினர். 2012ல் மத்திய கிழக்கு நாடுகளில் 'மெர்ஸ்' வைரஸ் தாக்கியது.பரவும் விதம்* 'மெர்ஸ்' வைரஸ் பாதிக்கப்பட்ட ஒட்டகத்தில் இருந்தும், 'சார்ஸ்' வைரஸ், பாதிக்கப்பட்ட புணுகு பூனையிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியது.* சீனாவின் உகான் நகரில் கடல் உணவு விற்பனை சந்தையில், 'கொரோனா' வைரஸ் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியது. இருமல் மற்றும் தும்மல் மூலம் பரவுகிறது.அறிகுறி* தொடர் காய்ச்சல்* தலைவலி* தொண்டை வலி* மூக்கு ஒழுகுதல், இருமல்* மூச்சுத் திணறல்* வயிற்றுப் போக்கு* கிட்னி செயலிழப்பு, இறுதியில் மரணம்சிகிச்சை: தடுப்பு மருந்து தற்போது இல்லைபரிந்துரை: நன்றாக கை கழுவுதல், இருமல், தும்மல் வரும் போது வாய், மூக்கை துணியால் மூடுதல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்