உள்ளூர் செய்திகள்

முழங்கால் நீர்க்கட்டிக்கு சிகிச்சை உண்டா

45வயதான எனக்கு தோள்மூட்டு எலும்பு முறிந்து 4 முறை அறுவை சிகிச்சை செய்தேன். தற்போது மூட்டுவலியால், தோளை உயர்த்த முடியவில்லை. தோள்மூட்டு தேய்மானம், சுற்றுப்பட்டை தசைகள் கிழிந்ததாக கூறுகின்றனர். என்ன செய்வது?பொதுவாக ரொட்டேட்டர் கப் கிழிந்து தோள்மூட்டு தேய்மானம் உள்ளவர்களுக்கு சாதாரணமாக செய்யப்படும் மூட்டு மாற்று சிகிச்சை செய்வது செயல்படாது. ஆனால் தற்போது நவீன தொழில்நுட்பத்தில் இவ்வாறு உள்ளவர்களுக்கு என எதிர்மறை தோள்மூட்டு மாற்று சிகிச்சை ஒரு தீர்வு ஆகும். தேர்ச்சி பெற்ற சிலர் இச்சிகிச்சையை அளிக்கின்றனர்.எனது வயது 45. முழங்காலில் வலி ஆறுமாதமாக உள்ளது. எம்.ஆர்.ஐ., பரிசோதனையில் மெனிஸ்கஸ் கிழிந்துள்ளது. முழங்காலின் பின்னால் ஒரு நீர்க்கட்டி உள்ளது. இதை பேக்கர் சிஸ்ட் என குறிப்பிட்டுள்ளனர். எனக்கு சிகிச்சை உள்ளதா?பேக்கர் சிஸ்ட் என்பது மூட்டின் பின்பகுதியில் மூட்டில் இருந்து வந்த ஒரு வகை நீர்க்கட்டி. இதற்கு சிகிச்சை அளிக்க நுண்துளை சிகிச்சையில் மெனிஸ்கஸ் கிழிசலை சரிசெய்து, ஆர்த்ராஸ்கோபி வழியாக பேக்கர் சிஸ்ட்டை அகற்ற முடியும். விரைவாக இயல்பான வாழ்க்கைக்கு திரும்பவும் முடியும்.ஆறுமாதமாக தோள்மூட்டில் வலி உள்ளது. டாக்டர்கள் தசைபிடிப்பு, கழுத்துவலி, பெரி ஆர்த்ரைட்டீஸ் என கூறினர். எம்.ஆர்.ஐ., பரிசோதனையில் ரொட்டேட்டர் கப் கிழிந்துள்ளதாக கூறப்பட்டது. என்ன செய்யலாம்?தோள்மூட்டு நோய்களில் பயிற்சி பெற்றவர்கள் மிகச் சிறுபான்மையினரே உள்ளனர். உங்கள் அடிப்படை பிரச்னையை கண்டறிய தோள்மூட்டினில் தேர்ச்சி பெற்ற ஒரு மருத்துவரிடம் நீங்கள் ஆலோசித்து உங்கள் மூட்டின் பிரச்னையை அறியலாம். நீங்கள் கூறிய நான்கு நோய்களும் தோள்மூட்டினில் சாத்தியமே. சரியாக பரிசோதித்தால் எதனால் உங்கள் வலி என்பதை அறிய முடியும்.நான் நன்கு ஓடுவேன். சில மாதங்களாக சில வேலைகளால் என்னால் ஓடமுடியவில்லை. இருநாட்களாக வலது காலின் முன்பகுதியில் அதிக வலி உள்ளது. நடக்கவும் சிரமமாக உள்ளது. ஏன் இப்படி?சிலமாதங்கள் இடைவெளிக்குப் பின் திடீர் என நெடுந்துாரம் ஓடினால் காலில் உள்ள 'டிபியா' என்னும் எலும்பில் அதிகமான விசைகள் சென்று, கால் எலும்பில், 'ஸ்டிரெஸ் பிராக்சர்' ஆக வாய்ப்புள்ளது. நீங்கள் எம்.ஆர்.ஐ., செய்தால் இதை அறிய முடியும். ஸ்டிரெஸ் பிராக்சர் இருந்தால் காலுக்கு மாவுக்கட்டு போட்டு ஓய்வு கொடுப்பது அவசியம். எனவே உடனடியாக எம்.ஆர்.ஐ., பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.- டாக்டர் கே.என்.சுப்ரமணியன்மதுரை. 93442 46436


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !