மூட்டு வலி என்பது தேய்மானம் அல்ல!
'ருமட்டாய்டு ஆர்த்தரடீஸ்' எனப்படும், முழங்கால் மூட்டு அழற்சியால், முழங்காலில் மட்டும் வலி ஏற்பட்டால், அது மூட்டு தேய்மானத்தால் ஏற்பட்டதாக இருக்கலாம்.பொதுவாக இது, 60 வயதிற்கு மேல் வரும்.ஆனால், அதே வலி, முழங்காலில் மட்டுமல்லாமல், கழுத்து, கைகள், கணுக்கால் என்று, உடம்பின் அனைத்து மூட்டுப் பகுதிகளிலும் இருந்தால், 'கனெக்டிவ் டிஷ்யூ டிசாடர்' எனப்படும், இணைப்பு திசுக்களில் பிரச்னையின், அறிகுறியாக இருக்கலாம். இது, எந்த வயதினரையும் தாக்கலாம். உடலில் உள்ள நோய் எதிர்ப்பணுக்கள், செல்களையே அழிப்பதால் ஏற்படும் பிரச்னை இது.என்ன காரணம் என்பது, உறுதியாக தெரியவில்லை.வீடு கட்டும் போது, ஒவ்வொரு செங்கல்லையும் இணைக்கும் சிமென்டைப் போல், உடம்பில் உள்ள ஒவ்வொரு திசுவையும் இணைக்கக் கூடியது, 'கனெக்டிவ் டிஷ்யூஸ்' எனப்படும், இணைப்பு திசுக்கள். இந்த இணைப்பு திசுக்கள், சிறுநீரகங்கள், நுரையீரல், மூளை, மூட்டுக்கள் என்று, உடலின் எல்லாப் பாகத்திலும் உள்ளன.சர்க்கரை கோளாறு போன்று, மூட்டு அழற்சியும், எல்லா வகையான உறுப்புகளையும் தாக்கக் கூடியது.அதனுடைய முதல் வெளிப்பாடு, மூட்டு வலியாக இருக்கலாம். மூட்டு வலி என்பது, ஏதோ ஒரு நோயின் வெளிப்பாடு தானே தவிர, மூட்டுகளில் ஏற்பட்ட தேய்மானத்தால் வரும் நோய் அல்ல. முழங்காலில் வலி என்று, பொது மருத்துவரிடம் சென்றால், 'மூட்டு வலி வந்து விட்டது; அதை சரி செய்ய முடியாது. வலி நிவாரணிகள் மட்டுமே தீர்வு. முடியாத பட்சத்தில், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்' எனக் கூறுவர்.இணைப்பு திசுக்களில் ஏற்பட்ட பிரச்னையால், மூட்டுக்களில் வலி ஏற்பட்டு, சரியான சிகிச்சை தராவிட்டால், உள் உறுப்புகள் செயலிழக்கும் அபாயமும் உள்ளது.இதற்கென்றே உள்ள சிறப்பு டாக்டரிடம் சென்றால், பிரச்னை எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை தர முடியும்.டாக்டர் டி.என். தமிழ்ச்செல்வன்தலைவர் மூட்டுமுடக்கவியல் துறைராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைசென்னை