குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!
இரண்டு இட்லி... இரண்டு மாடிகள்!தினமும் சாப்பிடும் உணவில், 25 சதவீதம், நார்ச்சத்து இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய நம் உணவுப் பழக்கத்தில், நம் உணவிலிருந்து, வெறும், 10 சதவீத நார்ச்சத்து தான் கிடைக்கிறது. நிறைய பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும் என, நமக்குத் தெரிந்தாலும், அப்படியே முழு பழமாகவோ, சமைத்த காய்கறிகளாகவோ சாப்பிடாமல், ஜூஸ், சூப் என, மாறிவிட்டோம். முழுதாக அப்படியே சாப்பிடும் போது தான், இவற்றில், இயற்கையாகவே இருக்கும் நார்ச்சத்து கிடைக்கும். சாப்பிடும் உணவில் உள்ள கலோரி, சக்தியாக மாறுவதற்கு, 'பி' விட்டமின்கள் அவசியம். ஜூஸ், சூப் என, வேறு வடிவத்திற்கு மாறும் போது, இவையும் சிதைந்து விடுகின்றன. நான்கு இட்லி சாப்பிடும் பழக்கம் இருந்தால், இரண்டு இட்லி, மீதி இரண்டு இட்லிக்கு பதில், காய்கறி அல்லது பழ சாலட் என, சாப்பிடலாம். பழங்கள், காய்கறிகள் நிறைய சாப்பிடும்போது, வயிறு நிறைந்த உணர்வு இல்லாமல், அதே சமயம், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கத் தேவையான, 'எனர்ஜி' கிடைக்கும். நான்காவது மாடியில் அலுவலகமா... இரண்டு மாடிகள் மட்டும் லிப்ட், மற்ற இரண்டு தளத்திற்கு படிகள் என, தினசரி பழக்கத்தில் சிறிது மாற்றம் செய்தால் போதும்; உடல் எடை தானாகக் குறையும்.உத்ரா ஷ்ரவன், டயட்டீஷியன், சென்னைutharas.u@simshospitals.com