உள்ளூர் செய்திகள்

கண்ணை கண்ணென காப்போம்!

கண்களை பாதிக்கும் சீசன் நோய்கள் என்ன?ஆடி மாதங்களில் காற்றினால் அதிக துாசி படிவதால் பாதிக்கப்படும். மார்கழி மாதம் பனிப் பொழிவு அதிகமாக இருப்பதால் வைரஸ் நோய்கள் கண்களை பாதிக்கும்.மாசு படிந்த தண்ணீரால் கண்கள் பாதிக்குமா?குளம், ஊரணி, கண்மாய்களில் குளிக்கும் போது தண்ணீரில் உள்ள துாசி, துகள்கள் கண்களை பாதிக்கும். பொதுவாக முகம் கழுவும் போது கண்களை மூடிக்கொண்டு தான் கழுவ வேண்டும்.கண்களில் எரிச்சல் ஏற்படுவது ஏன்?வேதிப்பொருள்கள் உள்ளே செல்லும் போது எரிச்சல் உண்டாகும். வேதிப்பொருள்களின் தன்மைக்கேற்ப கண்கள் பாதிக்கும். சோப்பு, ஷாம்பூ, மருந்துகள் இடும் போது இது போன்ற தருணங்களில் கண்களை கைகளால் தேய்ப்பது, கசக்குவது போன்ற செயல்களை செய்யக்கூடாது. அப்படி செய்தால் கண்களில் உள்ள கருவிழி, வெள்ளை விழி பாதிக்கப்படும்.கண்களில் எதனால் அதிக பாதிப்பு ஏற்படுகிறது?'டிவி' அலைபேசியை அதிக நேரம் பார்த்தல், சத்துக் குறைபாடு போன்றவைகளால் பாதிப்பு ஏற்படுகிறது. நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், சர்க்கரை நோய், ரத்தகொதிப்பு உள்ளவர்களுக்கு கண் பாதிக்கப்படும். அனைவரும் 40 வயதிற்கு மேல் கண்களை முழுமையாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். முன்பு சராசரியாக 70 வயதில் பார்வை குறைபாடு வரும். தற்போது 40 வயதிலேயே பார்வை குறைபாடு ஏற்படுகிறது.கம்ப்யூட்டர்களில் பணிபுரிபவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?தொடர்ந்து 6 மணி நேரத்திற்கு மேல் கம்ப்யூட்டரில் பணிபுரிபவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பணியில் இருப்பவர்கள் வெளியில் எழுந்து நடக்க வேண்டும். இமைகளை இமைத்து தொடர்ந்து மூடி பயிற்சி பெற வேண்டும். கம்ப்யூட்டர் நாம் அமரும் பகுதியில் இருந்து கீழ் நோக்கி இருக்க வேண்டும். மேலே பார்க்கும் படி இருந்தால் பாதிக்கும். ஒரு நிமிடத்திற்கு 15 முதல் 20 முறை இமைகள் இமைக்க வேண்டும். கம்ப்யூட்டர் பார்ப்பவர்களால் இமைக்க முடியாது.கம்ப்யூட்டர் வழியாக என்ன பாதிப்புகள் ஏற்படும்?கண் எரிச்சல், உறுத்தல், கண்களில் வறட்சித்தன்மை ஏற்பட்டு புண்கள் ஏற்படும். இதனால் துாக்கம் குறையும். இது போன்ற பணிகளில் இருப்பவர்கள் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 5 நிமிடம் கண்களை மூடி இருக்க வேண்டும். இதனை செய்தால் பாதிப்புகள் குறையும்.துாங்கவில்லை என்றால் கண்ணுக்கு பாதிப்பா?இரவுப் பணிக்கு செல்பவர்கள் பகல் நேரங்களில் கண்டிப்பாக துாங்க வேண்டும். இல்லை என்றால் 7 முதல் 8 ஆண்டுகளில் கண்களில் கண்ணீர் வற்றி வறட்சியாகிவிடும்.கண்களுக்கு பாதுகாப்பு எது?கண்களில் உள்ள கண்ணீரும், கண் இமைகள் மட்டுமே பாதுகாப்பு. கண்ணீர் வற்றிவிட்டால், வறட்சி ஏற்பட்டு கண்களில் பாதிப்பை ஏற்படுத்தும். கண்களை தேய்க்கவோ, கசக்கவோ கூடாது. பாதிப்புகள் ஏற்பட்டால் மருத்துவர்களை அணுக வேண்டும்.நிறக்குருடு யாருக்கு ஏற்படுகிறது?பொதுவாக பிறப்பால் பாரம்பரியமாக வருகிறது. விட்டமின் 'ஏ' குறைபாட்டால் நிறக்குருடு ஏற்படுகிறது.கண்நீர் அழுத்தம் எதனால் வருகிறது?இதில் பல வகைகள் உள்ளது. கருவிழியில் தயாராகும் கண்ணீரில் அடைப்பு ஏற்பட்டு பாதிக்கும். கண் நரம்புகள் பாதிக்கும் போதுகண் நீர் அழுத்தம் ஏற்படும். இதன் மூலம் கண்களின் பக்கவாட்டு பகுதியில் இருக்கும் பார்வைகுறையும்.கண் புரை நோய் வருவது ஏன்?சிலருக்கு கண்புரை நோய் பாரம்பரியமாக வரும். அதிக மருந்து, மாத்திரை எடுப்பவர்களுக்கு கண்களில் புரை ஏற்படும். இதனை அறுவை சிகிச்சை மூலம் தான் செய்ய முடியும்.பார்வை குறைபாடு களை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?அலைபேசி, 'டிவி' அதிகம் பார்ப்பதை குறைக்க வேண்டும். அதிக ஒளி வீசும் விளக்குகளை வீட்டில் பொருத்தக்கூடாது. எல்.இ.டி., விளக்குகள் பயன்படுத்தலாம். கீரை, காய்கறி, முட்டை, பழங்கள் பால் போன்ற சத்தான உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.டாக்டர் எம்.பிரியாகண் மருத்துவர், ராமநாதபுரம்89037 35825


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !