சின்ன சின்ன மருத்துவம்!
பித்தம் நீங்க: பித்தம், வாந்தி, நெஞ்சு கறிப்பு, வயிற்று வலி போன்ற பிரச்னைகளுக்கு இஞ்சியை -100 கிராம் எடுத்து, அதன் தோலை அகற்றி சுத்தம் செய்துவிட்டு, சிறு துண்டுகளாக நறுக்கி பசும்பாலில் அவித்து நிழலில் உலர்த்தி காயவைக்க வேண்டும். காய்ந்து பின் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். சாப்பிடும் போது ஒரு டீஸ்பூன் பொடியுடன் சர்க்கரை கலந்து சாப்பிடலாம். இதனால், நெஞ்சுகறிப்பு பித்தம், வயிற்றுவலி, குணமாகும்.பசியின்மை: பசியின்மை, மலச்சிக்கல், வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு கற்றாழை சாற்றை உட்கொண்டால் நலம் பெறலாம். ஒரு தேக்கரண்டி கற்றாழை சாற்றை வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். கசப்புத் தன்மையைக் குறைக்க, அதனுடன் சிறிது உப்பு சேர்க்கலாம்.வாயு தொல்லை: வாயு தொல்லை நீங்க, ஒரு டம்ளர் வெந்நீரில் சிறிது பெருங்காயத்தையும், உப்பையும் சேர்த்து குடித்தால், வாயு தொல்லை நீங்கும். வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதால், வாயு தொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும். வெள்ளைப்பூண்டு, பெருங்காயம் இரண்டையும் நெய்யில் சிவக்க வறுத்து, புளி, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து துவையலாக்கி, உணவில் அவ்வப்போது சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல், வாயு பிரச்னைகள் விலகும்.வயிற்றுக் கடுப்பு: வெந்தயத்தை அரைத்துத் தயிரில் கலந்து கொடுக்க, வயிற்றுக்கடுப்பு நீங்கும். வயிற்றுக்கடுப்பு தோன்றினால், வடித்த கஞ்சியை சுடச்சுடச் சாப்பிட்டால் குணம் தெரியும்.வயிற்றுப் பூச்சி வெளியேற: மாங்கொட்டையின் பருப்பை உலர்த்தித் தூள் செய்து தேனில் குழைத்துக் கொடுத்தால் பூச்சிகள் வெளியேறும்.வயிற்றுப் போக்கு: சுண்டைக்காய் அளவு ஜாதிக்காயை நெய்யில் வறுத்துப் பொடி செய்து தேனில் குழைத்து மூன்று வேளை சாப்பிட்டால், எப்படிப்பட்ட வயிற்றுப் போக்கும் நின்றுவிடும். தயிர், வெந்தயம், சர்க்கரை மூன்றையும் கலந்து அரைமணி நேரம் ஊறவைத்து சாப்பிட்டால் வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு நிற்கும்அஜீரணம்: ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து, ஆற வைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். வெந்நீர் குடிப்பதால் உணவு எளிதில் ஜீரணமாகும். பசியும் எடுக்கும்.நாடாப் புழு வெளியேற: கொஞ்சம் நீரில் சிறிதளவு மாதுளை மரவேரைத் தட்டிப்போட்டு சுண்டக்காய்ச்சி, தினமும் அரை கப் சாப்பிட்டு வந்தால் வயிற்றிலுள்ள நாடாப்புழுக்கள் வெளியேறும்.மலச்சிக்கல் நீங்க: மலச்சிக்கல் தீர, இரவில் மாம்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீர் அருந்த மலச்சிக்கல் நீங்கும்.