சாதாரண உப்பே சரியான உப்பு
உடலில் அயோடின் சத்துக்குறைவால், தைராய்டு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருகின்றன என, மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக, அயோடின் கலந்த உப்பை உணவில் சேர்த்துக்கொண்டால், இந்நோய்கள் வராது எனவும் கூறப்பட்டது. அதனால், பலர் அயோடின் கலந்த உப்பை உணவில் சேர்த்து வருகின்றனர். ஆனால், இயற்கையாக பழங்கள், காய்கறிகள், பயறுகள், கொட்டைகள், தானியங்கள் மற்றும் கீரைகளில் அயோடின் சத்து நிறைய இருப்பதால், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த தேவையில்லை என, சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். அயோடின் கலந்த உப்பை பயன்படுத்தினால், தைராய்டு, மார்பக புற்று நோய் மண்ணீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், ரத்த வெள்ளை அணுக்கள் குறைபாடு, வாயு தொல்லை, நீல நிற நகங்கள், பற்களில் கறைபடிதல் சிறுநீரக குழாய் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு, அயோடின் கலந்த உப்பை தடை செய்து இருப்பதால், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளும் அயோடின் உப்புக்கு தடை விதித்திருப்பதாக, செய்திகள் பரவி உள்ளன. அதனால், இதில் எது உண்மை, எந்த உப்பை சாப்பிடுவது என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இப்பிரச்னையில் நாம் குழம்ப தேவையில்லை. பல ஆயிரம் ஆண்டுகளாக கடலில் இருந்து இயற்கையாக கிடைக்கும், சாதாரண உப்பைத்தான் நாம் பயன்படுத்தி வருகிறோம். சாதாரண உப்பு சாப்பிட்டதால், இந்நோய் வந்தது என்று எந்த மருத்துவரும் சொன்னதில்லை. அதனால், உணவில் எந்த உப்பை பயன்படுத்துவது என்பதில் இனி குழப்பமே வேண்டாம். எப்போதும் போல் சாதாரண உப்பையே, நம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.